Thursday, December 24, 2020

பல்கலை தேர்வு அதிகாரிக்கு ஆணையம் 'நோட்டீஸ்'


பல்கலை தேர்வு அதிகாரிக்கு ஆணையம் 'நோட்டீஸ்'

Added : டிச 23, 2020 23:42

சென்னை:துணைவேந்தர் சுரப்பாவுக்கு எதிரான புகாரில், ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு, பல்கலை தேர்வு அதிகாரிக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா, தன் நிர்வாக காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளால், பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக, உயர்கல்வி துறைக்கு புகார்கள் வந்தன. இந்த கடிதங்களின் அடிப்படையில் விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் சுரப்பா மீதான, இந்த புகாருக்கு ஆதாரமில்லை என்றும், இது, அவரை பழிவாங்கும் நடவடிக்கை என்றும், பல்வேறு கல்வியாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், அரசு அமைத்த ஆணையம் சார்பில், முதலில் பல்கலையின் பதிவாளர் கருணாமூர்த்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது.இதையடுத்து, பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன், உரிய ஆவணங்களுடன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை அவர், ஆஜராக உள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024