Friday, August 6, 2021

சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக 30 வக்கீல்களுக்கு அனுமதி

சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக 30 வக்கீல்களுக்கு அனுமதி

Added : ஆக 05, 2021 23:54

சென்னை:உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வாதாட, மூத்த வழக்கறிஞர்கள், 30 பேரை நியமித்துக் கொள்ள, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக அரசு தொடர்பான வழக்குகளில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜராகி வாதாட, பிரபல வழக்கறிஞர்கள், 30 பேர் பெயரை, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், அரசுக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பினார்.

அதை பரிசீலித்த அரசு, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆப் இந்தியா, பிரபல மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்கி, கோபால் சுப்ரமணியன், ராஜிவ் தவான், துஷ்வந்த் தேவ், சேகர் நபடே. ராதாகிருஷ்ணன், என்.ஆர்.இளங்கோ, வில்சன், விடுதலை, சஞ்சய் ஹெக்டே உட்பட, அரசு தலைமை வழக்கறிஞர் பரிந்துரை செய்த, 30 பேரையும், தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்ற வழக்குகளில் வாதாட நியமித்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.இதற்கான அரசாணையை, உள்துறை செயலர் பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024