Friday, August 6, 2021

ஆபாசமாக பேசி பணம் பறிக்கும் கும்பல் புகார்கள் அதிகரிப்பு: போலீசார் எச்சரிக்கை


ஆபாசமாக பேசி பணம் பறிக்கும் கும்பல் புகார்கள் அதிகரிப்பு: போலீசார் எச்சரிக்கை

Added : ஆக 05, 2021 23:38

சென்னை:சமூக வலைதளங்கள் வாயிலாக வலை விரிக்கும் மர்ம கும்பல், 'வீடியோ காலில் ஆடைகளின்றி பேசலாம்' என, பண மோசடியில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.

அடுத்தடுத்து புகார்கள் வரும் நிலையில், மர்ம கும்பலிடம் உஷாராக இருக்க வேண்டும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.'வாட்ஸ் ஆப்''பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' என, சமூக வலைதளங்களில், மணிக்கணக்கில் மூழ்கி கிடப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முகமறியாத நபர்களிடம், நள்ளிரவு துவங்கி அதிகாலை வரையில் கூட, 'சாட்டிங்' செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. தம்பதியரில் ஒருவர் துாங்கிய பின் மற்றொருவர், 'சாட்டிங்' செய்து உடல் நலத்தை கெடுத்துக் கொள்ளும் போக்கும் நீடித்து வருகிறது.

இதுபோன்ற நபர்களை குறி வைத்து, மர்ம கும்பல், 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடியில் ஈடுபட்டு வருகிறது. சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்பு கொள்ளும் இவர்கள், 'வாட்ஸ் ஆப்' எண்ணை பகிர்கின்றனர். அதன்பின், தன் ஆடைகளற்ற படத்தை அனுப்பி வைக்க, 100 ரூபாய்; 30 நிமிடங்கள் ஆபாசமாக பேச, 300 ரூபாய்; வீடியோ காலில் ஆடைகளின்றி பேச, 800 ரூபாய் என, வலை வீசுகின்றனர். எதிர்முனையில் இருப்பவரை நம்ப வைக்க, குரல் பதிவு மெசேஜ் அனுப்பி வைக்கின்றனர்.

இதை கேட்கும் ஜொள்ளு நபர்கள், மோசடி நபர்களின் வலையில் விழுந்து, பல லட்சம் ரூபாயை பறிகொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மோசடிஅந்த வகையில், சென்னையில் இரண்டு மாதங்களில், கல்லுாரி மாணவர், டாக்டர் உட்பட, மூன்று பேரிடம், 19 லட்சம் ரூபாயை சுருட்டி உள்ளனர்.

இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், தனித்தனியாக மூன்று வழக்குகள் பதிந்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், மோசடி நபர்களில் பெண்களும் உள்ளனர். இவர்கள், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட, ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களை அனுப்பி, 'போன்பே, கூகுள் பே 'என, டிஜிட்டல் பண பரிவர்த்தனை வாயிலாக மோசடி செய்து வருவது தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீசார் கூறியதாவது:சபல நபர்களை குறி வைத்து, இந்த மோசடி நடக்கிறது. பணத்தை பெற்ற பின், ஜொள்ளு நபர்களின் படங்கள் மற்றும் வீடியோவை பதிவு செய்யும் இந்த கும்பல், அதை சம்பந்தப்பட்ட நபரின் நண்பர்களுக்கு அனுப்பி வைக்க இருப்பதாக மிரட்டி பணம் பறித்து வருகிறது. இவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது, எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024