அரசு ஊழியர்களுக்கு மாதிரி துறை தேர்வு
Added : ஆக 05, 2021 23:25
சென்னை:அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள் தொடர்பான பயிற்சி தேர்வு, ஆன்லைனில் வெளியிடப்பட்டு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
இது குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள், கணினி வழி தேர்வாக நடத்தப்படும். இது தொடர்பான விதிமுறைகள், குறிப்புகள், ஆன்லைன் மாதிரி தேர்வு உள்ளிட்டவை, டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
எனவே, துறை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் தேர்வு தொடர்பான விபரங்களை பார்த்து, தேர்வுக்கு தயாராகி கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment