Saturday, August 7, 2021

திருவள்ளுவர் பல்கலை அறிவிப்பு ரத்து


திருவள்ளுவர் பல்கலை அறிவிப்பு ரத்து

Added : ஆக 07, 2021 00:09

சென்னை:திருவள்ளுவர் பல்கலை பதிவாளர், முதுகலை படிப்புக்கு விண்ணப்பங்களை வரவேற்று வெளியிட்ட அறிவிப்பை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

வேலுார் திருவள்ளூவர் பல்கலையை பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக்கி, ஜெயலலிதா பல்கலை அமைக்கப்பட்டது.புதிய பல்கலைக்கு நிதி ஒதுக்கவும், பதிவாளர் நியமிக்கவும் கோரி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், வழக்கு தொடர்ந்தார்.மனுவில், 'விழுப்புரம் மாவட்டம், செம்மேடு கிராமத்தில், பல்கலைக்காக 70 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

'திருவள்ளுவர் பல்கலை பதிவாளர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, அதன் முதுகலை மையத்தில், விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டது சட்டத்தை மீறியது. இதற்கு தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 'சட்டம் அமலில் இருக்கும் போது, அதற்கு எதிராக அரசு எப்படி செயல்பட முடியும்?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, உயர் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்தார். முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:டாக்டர் ஜெயலலிதா பல்கலை சட்டத்தை ரத்து செய்யப் போவதாக, உயர் கல்வித் துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. சட்டசபைக்கான அதிகார வரம்புக்குள் சட்டம் இயற்றும் போது, அதை ரத்து செய்யவும் அதிகாரம் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தற்போதைய அரசும், இந்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கான நோக்கத்தை குறிப்பிட்டுள்ளது. இருந்தாலும், அதுவரை சட்டம் அமலில் இருக்கும் நிலையில், அதை பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது.எனவே, முதுகலை படிப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்று, திருவள்ளுவர் பல்கலை அறிவிப்பு வெளியிடுவதற்கு, அதிகார வரம்பு இல்லை; ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

Govt employees to get insurance cover up to 1cr

Govt employees to get insurance cover up to 1cr  10.10.2026 Lucknow: In an initiative to strengthen the welfare of state govt employees and ...