Saturday, August 7, 2021

'கணவன் பலாத்காரம் செய்தால் மனைவி விவாகரத்து கோரலாம்'


'கணவன் பலாத்காரம் செய்தால் மனைவி விவாகரத்து கோரலாம்'

Updated : ஆக 07, 2021 02:08 | Added : ஆக 07, 2021 02:07 |

திருவனந்தபுரம்-'மனைவியின் விருப்பம் இன்றி பாலியல் பலாத்காரம் செய்யும் கணவனை தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்றாலும், இதுபோன்ற நடத்தையுடைய கணவனிடம் இருந்து மனைவி விவாகரத்து கோர முடியும்' என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், திருமணத்துக்கு பின் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட துவங்கினார். சரியான வருமானம் இன்றி வியாபாரம் முடங்கியது.இதையடுத்து மனைவியின் வருமானத்தில் குடும்பம் நடந்தது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது மனைவி, குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார்.அந்த மனுவில் தன் கணவர், பாலியல் ரீதியாக தன்னுடைய விருப்பமின்றி பலாத்காரம் செய்வதாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் தெரிவித்தார்.குடும்ப நல நீதிமன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. 'மனைவியை பணம் காய்க்கும் மரமாக அவரது கணவர் நடத்தி வந்துள்ளார்' என, உத்தரவில் கூறப்பட்டது.

இந்த விவாகரத்தை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் கணவர் மனு செய்தார்.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:மனைவியின் விருப்பமின்றி பாலியல் பலாத்காரம் செய்யும் கணவனை தண்டிக்க சட்டத்தில் இடமில்லை. ஆனால் மனைவியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மதிக்காமல், அவரை துன்புறுத்துவதும் கூட பாலியல் பலாத்கார வகையில் சேரும். இதுபோன்ற வழக்குகளில் மனைவி விவாகரத்து கோர, கணவனின் இந்த நடத்தை வழி வகுக்கிறது. இந்த வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024