Wednesday, January 2, 2019

செல்போன்களுக்கு அடிமையானவர்களை விடுவிக்க புதிய செயலி அறிமுகம்
 
தினகரன் 11 hrs ago




பெங்களூரு : செல்போன்களுக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதில் இருந்து விடுபட மொபைல் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஸ்மார்ட்போன்களே குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் கைகளை ஆக்கிரமித்துள்ளது. ஸ்மார்ட்போன்களில் குறிப்பாக வாட்ஸ் அப், பேஸ்புக், டிக் டாக் போன்றவற்றில் இளைஞர்கள் தங்களையும் மறந்து அதில் மூழ்கிவிடுகின்றனர். இந்நிலையில் செல்போன்களுக்கு அடிமையானவர்களை விடுவிக்க புதிய செயலி ஒன்று அறிமுகமாகி உள்ளது. பெங்களுருவில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனை இந்த செயலியை உருவாக்கியுள்ளது. டிஜிட்டல் டீடாக்ஸ் பை ஷட் க்ளினிக் என்ற பெயரிலான இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியில் ஒருமுறை பதிவு செய்துவிட்டால் அன்றாட மொபைல் பயன்பாட்டை ஆய்வு செய்து அதை குறைத்து கொள்வது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும். மேலும் தூக்கக் குறைபாடு, கண் எரிச்சல், தனிமை, பொழுது போக்காமை போன்ற தகவலைகளையும் இந்த செயலி பயனாளிகளிடம் இருந்து கேட்டு பெற்று அதற்கேற்ப ஆலோசனைகளை தருகிறது. செல்போன்களுக்கு அடிமையான கல்லூரி மாணவர்கள் 240 பேர் இந்த செயலியை பயன்படுத்தி அதில் 75% பலன் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சாதனங்களை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தி பலன் பெறுவது தொடர்பான சிறப்பு பிரிவை ஷட் என்ற பெயரில் பெங்களூரில் நிம்ஹான்ஸ் மருத்துவமனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...