Wednesday, January 2, 2019

பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரையுடன் தொகுப்பு பை1000 ரூபாய் வழங்கப்படும்
 
தமிழ் முரசு 7 hrs ago

 


சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியது. முதல் நாள் கூட்டம் என்பதால் ஆளுனர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

சரியாக 10. 04 மணிக்கு, கவர்னர் உரையை வாசிக்க தொடங்கினார். அந்த உரையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையும் தாமதமாக கிடைத்து வருவதால் மாநிலத்தின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வருவாயில் 14 சதவீத வருவாய் வளர்ச்சியை மாநிலங்கள் பெறும் வகையில் இழப்பீட்டு தொகையும் மற்றும் சேவைகள் வரி வருவாயில் மாநிலத்தின் பங்கையும் மத்திய அரசு உடனுக்குடன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் 2017-18ம் நிதியாண்டுக்கு தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய ரூ. 5454 கோடி வருவாயினையும், பொருட்கள் மற்றும் சேவைகள் வரியில் ரூ. 455 கோடி இழப்பீடு தொகையையும், 2018 ஏப்ரல் முதல் செப்.

வரையிலான ரூ. 1305 கோடி இழப்பீடு தொகைையயும் மத்திய அரசு இதுவரை வழங்க வேண்டியுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலுவை தொகையினை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.

தமிழகத்தின் உரிமையை பாதிக்கும் வகையில், அணை பாதுகாப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற சட்ட முன்மொழிவுகளில் தமிழகத்தின் கருத்துக்களை மத்திய அரசு கேட்டு எடுக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதால் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை இந்த அரசு மூட உத்தரவிட்டது. ஆனால் தற்போது இந்த ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

எனினும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த ஆலையை திறக்க தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்.

கஜா புயல் காரணமாக காவிரி பகுதிகள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இதுவரை தமிழக அரசு மீட்பு நடவடிக்கைக்கு ரூ. 2335. 48 கோடியை உடனடி நிவாரண உதவியாக வழங்கியுள்ளது.

மாநில பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 353. 70 ேகாடியை விடுவித்த மத்திய அரசுக்கு நன்றி. அங்கு உடனடி நிவாரண பணிகளுக்காக ரூ. 2709 கோடியையும் நிரந்தர மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ. 15,190 கோடியை மத்திய அரசிடம் தமிழக அரசு நிதியுதவி கோரியுள்ளது.

தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 900. 31 கோடியை கூடுதலாக விடுவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட பகுதியில் குடிசைகளுக்கு பதில் கான்கிரீட் வீடுகள் கட்டவும் மக்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் மத்திய அரசு திட்டங்களில் மறுசீரமைப்பு பணிகளுக்காக கூடுதல் நிதியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கர்நாடகாவில் உள்ள மேகதாதுவில் புதிய அணை கட்ட மத்திய நீர் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதை இந்த அரசு கடுமையாக எதிர்க்கிறது. இந்த திட்டத்தை உடனடியாக கைவிட மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

பெண்களின் பாதுகாப்புக்காக சமீபத்தில் உருவாக்கப்பட்ட 181 உதவி எண் மற்றும் காவலன் செயலி ஆப் ஆகியவை தமிழக மக்களின் பாதுகாப்பை குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளதால் 2019 ஜனவரி 1ம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி எரியக்கூடிய சில பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்துள்ளது.

காவிரி வடிநில பகுதிகளில் கஜா புயலிலால் ஏற்பட்ட தாக்கத்ைதயும் வட மாவட்டங்களில் பரவலாக ஏற்பட்டுள் வறட்சியின் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பை இந்த அரசு வழங்க உள்ளது.

இது தவிர திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு திருவாரூர் மாவட்டம் தவிர, மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட ரூ. 1000 இந்த அரசால் வழங்கப்படும்.

இவ்வாறு உரையில் கூறப்பட்டுள்ளது. .

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024