Saturday, January 19, 2019


ஆங்கில​ம் அறிவோமே 248: சோதனை மேல் சோதனை முயற்சி!

Published : 15 Jan 2019 10:06 IST

ஜி.எஸ்.எஸ்.




கேட்டாரே ஒரு கேள்வி

“Butter இல்லாத ஒன்றுக்கு buttermilk என்ற பெயர் ஏன்? Sweet எதுவும் வைக்கப்படாத அல்லது இனிக்காத ஒன்றை sweetbread என்று அழைப்பது ஏன்?”.

நன்றாய்க் கேட்டீர்கள் நண்பரே. பதிலுக்கு “வாழை மரம் என்று மரமல்லாத ஒன்றை நாம் குறிப்பிடுவது ஏன்? Dry-cleaning என்பது உண்மையில் உலர் சலவை இல்லையே!” என்று கேட்கத் தோன்றுகிறது.

இந்த இடத்தில் பொருத்தமில்லாத பெயர்கொண்ட வேறொன்றையும் பார்க்கலாம். “Ten-gallon hat-ல் எவ்வளவு தண்ணீர் நிரப்பலாம்?” என்று கேட்டால் “பத்து கேலன்” என்று கூறக் கூடாது. கெளபாய் தொப்பி என்பார்களே ‘ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர்’ அணிந்த தொப்பி) அதுபோன்றதுதான் Ten-gallon hat. இந்தப் பெயரின் பின்னணி கொள்ளளவு தொடர்பானது அல்ல. ஸ்பானிஷ் மொழியில் Un sombrero tan galan என்பதற்கான பொருள் ‘என்னவொரு அழகான தொப்பி’ என்பதுதான். இதிலிருந்தே Ten-gallon hat உருவானது.

****************

Poncho என்பதும், Raincoat என்பதும் ஒன்றுதானே எனக் கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.

உடலை வெப்பமாக வைத்துக் கொள்வதற்காக வெளியில் அணியப்படும் ஒருவித ஆடையே Poncho. இது பொதுவாக லூசாக இருக்கும். Rain Poncho என்பது மழைக்கோட்டுதான். ஆனால், எளிமையானது. பெரும்பாலும் ஒளி ஊடுருவும் (Transparent) தன்மை கொண்டதாக இது இருக்கும்.



****************

‘Right & left’ என்ற phrase-க்கு என்ன பொருள்?

“இடமும் வலமுமாக” என்பதல்ல. “எல்லாப் பக்கங்களிலும் அல்லது எல்லா இடங்களிலும்” என்றுதான் அதற்குப் பொருள்.

****************

Vendor என்று பல நிறுவனங்களில் குறிப்பிடு கிறார்களே அவர் யார்?

எதையோ விற்பவரை vendor என்பார்கள். Street Vendor, Vegetable Vendor, Fruit Vendor. Vendor என்பவர் தனி நபராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எதையோ விற்கும் ஒரு நிறுவனமாகவும் இருக்கலாம்.

சிப்ஸ்

# குழந்தை அழும்போது அதன் வாயில் nipple போன்ற ரப்பரை வைப்போமே அதை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிட வேண்டும்?

Pacifier.

# Stow என்றால்?

பொருட்களை அழகாகவும் சீராகவும் ஓரிடத்தில் அடுக்கி வைப்பதைத்தான் stow செய்வது என்பார்கள். We began stowing our luggage into the boot (காரின் பின்புறம் சாமான்களை வைக்கும் பகுதிகளை டிக்கி என்று சொல்வோமே, அதுதான் boot!).

# Tentative என்றால் தற்காலிகமாக எனலாமா?

சோதனை முயற்சியாக என்பது மேலும் பொருத்தம்.

ஆங்கிலம் அறிவோமே-246-ல் கேட்கப்பட்ட புதிர் போட்டிக்கான சரியான விடைகள்

1. ஆமோதிப்பு – S (Yes)

2. ஜப்பானிய நாணயம் – N (Yen)

3. கட்டுப்பாடுக்கு எடுத்துக்காட்டு – Q (Queue)

4. ஒருவகைப் பூச்சி – B (Bee)

5. நீங்களும், நானும் இணைந்தால் - V (We)

6. ஒரு கேள்விச் சொல் – Y (Why)

7. ஒரு நிரலாக்க மொழி – C (Computer Programming)

8. இந்தத் தானத்தில் இலங்கை முன்னணியில் இருக்கிறது – I (Eye)

9. என்னோடு நீ இருந்தால் உன்னோடு நான் இருப்பேன். – I (ஐ-திரைப்படத்தில் இடம் பெற்ற பாட்டு )

10. முன்னாள் – X (Ex)

11. தமிழக்கு ஐயா. வட இந்தியருக்கு? – G (Ji)

12. உருளை வடிவத்தில் உள்ள பருப்பு வகை – P (Pea)

13. சுனாமியின் தாயகம் - C (Sea)

14. எந்த எழுத்துக்குப் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்? – C (BD (பிடி)-க்கு நடுவே உள்ளது

15. எந்த எழுத்துக்குக் கண்கள் களைப்படைய வாய்ப்பு உண்டு. - U (T,V-க்கு நடுவே உள்ளது).

சரியான விடை அளித்தவர்களின் பெயர்கள் அடுத்த வாரம்

தொடர்புக்கு: aruncharanya@gmail.com | ஓவியம்: வெங்கி

No comments:

Post a Comment

NEWS TODAY 29.09.2024