Friday, January 18, 2019


எய்ம்ஸ் மருத்துவமனை 27ல் அடிக்கல் நாட்டு விழா

Added : ஜன 17, 2019 22:17

தமிழகத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள, மூன்று பல்நோக்கு மருத்துவமனைகளின் திறப்பு விழா மற்றும் மதுரையில் அமைய உள்ள, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என, 2015ல், மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, மதுரை, தோப்பூரில், 200 ஏக்கர் பரப்பளவில், 1,264 கோடி ரூபாய் செலவில், 750 படுக்கைகளுடன், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இதற்கான பூர்வாங்க பணிகள் முடிந்துள்ளன. மருத்துவமனை கட்டடங்களுக்கான பணிகள் துவங்க உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, வரும், 27ல் நடக்கிறது. அதில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்ட உள்ளார்.இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:மதுரை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, ஜன., 27ல், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும், மத்திய - மாநில அரசு பங்களிப்புடன், தலா, 150 கோடி ரூபாய் செலவில், தஞ்சை, நெல்லை, மதுரை ஆகிய, மூன்று நகரங்களில், உயர்தர பல்நோக்கு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மூன்று மருத்துவமனைகளையும், பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், முதல்வர், மத்திய - மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -



No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024