வயிற்றுக்குள் பிளேடு 'ஆப்பரேஷனில்' விபரீதம்
Added : ஜன 17, 2019 22:11
பரத்பூர், ராஜஸ்தானில், குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையின் போது, டாக்டர்களின் அலட்சியத்தால், பிளேடு உடைந்து, பெண்ணின் வயிற்றுக்குள் சிக்கிய, அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, பரத்பூர் மாவட்டம், கும்ஹெர் கிராமத்தைச் சேர்ந்த, மீனா தேவி, 25, என்ற பெண்ணுக்கு, மூன்று குழந்தைகள் உள்ளன.இதையடுத்து, கருத்தடை ஆப்பரேஷன் செய்ய, தேவியின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். நேற்று முன்தினம், கிராமத்தில் உள்ள சமூக சுகாதார மையத்தில், குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. இதில், 18 பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். 17 பெண்களுக்கு வெற்றிகரமாக கருத்தடை ஆப்பரேஷன் செய்யப்பட்டது.தேவிக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்தபோது, பிளேடு இரண்டாக உடைந்து, ஒரு பகுதி, தேவியின் வயிற்றில் சிக்கியது. இதை அகற்ற முடியாததால், ஜெய்ப்பூரில் உள்ள, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினர்.ஆத்திரமடைந்த தேவியின் உறவினர்கள், மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியிடம் புகார் அளித்தனர். விசாரணை நடத்தி, தவறு செய்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக, மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி உறுதியளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment