ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை : அரசு பள்ளி ஆசிரியரின் விபரீத முடிவு
Added : ஜன 20, 2019 00:53 |
கோவை: கோவை அருகே, கருமத்தம்பட்டியில், அரசு பள்ளி ஆசிரியர், தன் தாய், மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கருமத்தம்பட்டி, அமலி நகரை சேர்ந்தவர், அந்தோணி ஆரோக்கியதாஸ், 38. இவர், திருப்பூர் மாவட்டம், கூலிப்பாளையம் அரசு பள்ளியில், ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு, 7:30 மணியளவில், அவரது வீட்டில் துாக்கில் தொங்கியவாறும், அவரது மனைவி ஷோபனா, 28, மகன் ரித்திக் மைக்கேல், 7, மகள் ரியா என்னும் 18 மாதக் குழந்தை மற்றும் ஆசிரியரின் தாய் புவனேஸ்வரி, 58, வாயில் நுரை தள்ளியவாறும், பிணமாக கிடந்தனர்.அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலை அடுத்து, கருமத்தம்பட்டி போலீசார், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றினர். ஆசிரியர் அந்தோணி ஆரோக்கியதாஸ், நான்கு பேருக்கும் விஷம் கொடுத்து, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுஉள்ளார். அவரது வீட்டில், இரண்டு பக்க அளவிலான கடிதத்தை, போலீசார் கைப்பற்றினர்.அதில், தினமும் கூலிப்பாளையத்துக்கு இரு சக்கர வாகனத்தில் செல்வதால், தீராத முதுகுவலியால் அவதிப்படுவதாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும், அந்தோணி குறிப்பிட்டுள்ளார்.மேலும் அந்த கடிதத்தில், 'இது ஆசிர்வதிக்கப்பட்ட ஜெப வீடு. என்னை எல்லாரும் மன்னித்து விடுங்கள். எங்கள் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை' என கூறி, உறவினர்கள் சிலரது பெயரை குறிப்பிட்டு, மன்னிப்பு கேட்டு எழுதப்பட்டுள்ளது.கருமத்தம்பட்டி போலீசார், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், 'ஆசிரியர் அந்தோணி ஆரோக்கியதாஸ் மதம் மாறி, திருமணம் செய்ததால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்' என்றனர்.
No comments:
Post a Comment