Sunday, January 20, 2019

பெங்களூரு விமானங்கள் சென்னையில் இறக்கம்

Added : ஜன 19, 2019 23:13

சென்னை: பெங்களூரில் கடுமையான பனிமூட்டம் காரணமாக, அங்கு தரையிறங்க வேண்டிய, ஐந்து விமானங்கள், சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.பெங்களூரு விமான நிலைய பகுதியில், நேற்று அதிகாலை கடும் பனிப்பொழிவு இருந்தது. அதனால், மும்பை, ஜெய்ப்பூர், கொச்சி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்த, ஐந்து விமானங்களால், அங்கு தரையிறங்க முடியவில்லை.எனவே, அந்த விமானங்கள், சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. இவை, சென்னை நிலையத்தில் உள்ள, விமான நிறுத்துமிடத்தை பிடித்துக் கொண்டதால், குவைத்திலிருந்து, கோவா வழியாக, சென்னைக்கு, 157 பயணியருடன், இன்று காலை, 9:30 மணிக்கு வந்த, 'ஏர் இந்தியா' விமானத்திற்கு, தரையிறங்க இடம் கிடைக்கவில்லை.அதனால், ஏர் இந்தியா விமானம், ஐதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. பெங்களூரு விமான நிலைய பகுதியில், பிற்பகலுக்கு மேல் நிலைமை சீரானதும், சென்னையில் தரையிறங்கிய, பெங்களூரு விமானங்கள், அங்கு புறப்பட்டு சென்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024