வடலுார் தைப்பூச விழா சிறப்பு ரயில்கள் இயக்கம்
Added : ஜன 19, 2019 23:16
சென்னை: கடலுார் மாவட்டம், வடலுார், வள்ளலார் தெய்வ நிலையத்தின், தைப்பூச விழாவை ஒட்டி, திருபாதிரிபுலியூர் - விருத்தாசலத்துக்கு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த ரயில், திருப்பாதிரிபுலியூரில் இருந்து, நாளை இரவு, 9:00 மணிக்கு புறப்பட்டு, இரவு, 10:30 மணிக்கு, விருத்தாசலம் சென்றடையும். விருத்தாசலத்தில் இருந்து, 22ம் தேதி அதிகாலை, 4:15 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை, 5:50 மணிக்கு, திருப்பாதிரிபுலியூர் சென்றடையும்.இந்த ரயில்கள், கடலுார் துறைமுகம், குறிஞ்சிப்பாடி, வடலுார், நெய்வேலி நிலையங்களில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment