உலகின் வயதான மனிதர் காலமானார்
Added : ஜன 20, 2019 17:00
டோக்கியோ: உலகின் வயதான மனிதர் என பெருமை பெற்ற ஜப்பானின் மசஜோ நோனகா, 113 வயதில் காலமானார்.
25.07.1905 ல், அவர் பிறந்ததாக, கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. டோக்யாவில் இருந்து 900 கி.மீ., தூரத்தில் உள்ள ஹொக்கைடோ தீவில் பிறந்த நோனகாவுடன் 6 சகோதரர்களும், ஒரு சகோதரியும் உடன் பிறந்தனர். அவருக்கு 1931 ல் திருமணம் நடந்தது. 5 குழந்தைகள் உள்ளனர். வயதான காலத்தில் நோனாகா, டிவியில் சுமோ குத்துச்சண்டை போட்டிகளை ரசித்தும், இனிப்புகளை ருசித்ததாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
ஜப்பானில் தான் அதிகம்பேர் நீண்ட வயது வாழ்ந்து வருகின்றனர். அந்நாட்டை சேர்ந்த ஜிரோயிமோன் என்பவர் 116 வயதில் 2013ல் காலமானார். இவருக்கு முன், பிரான்சின், ஜியானே லூயிசி கால்மென்ட் என்பவர் ,122 வயதில், 1997 ம் ஆண்டு காலமானதாக கின்னஸ் புத்தகத்தில் உள்ளது.
No comments:
Post a Comment