555 புதிய பஸ்களை துவக்கி வைத்தார் முதல்வர்
Added : ஜன 07, 2019 22:10 |
சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், 140 கோடி ரூபாயில் வாங்கப்பட்ட, 555 புதிய பஸ்களின் சேவையை, முதல்வர் பழனிசாமி, நேற்று, தலைமைச் செயலகத்தில், கொடியசைத்து துவக்கி வைத்தார்.தமிழக அரசின், எட்டு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 21 ஆயிரத்து, 678 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் வழியே, 1.74 கோடி பேர் பயன்பெறுகின்றனர். தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநில மக்களும், பஸ் சேவை வழியே, பயன்பெற்று வருகின்றனர்.பொதுமக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதற்காக, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு, 56; விழுப்புரம் - 82; சேலம் - 112; கோவை - 140; கும்பகோணம் - 102; மதுரை - 63 என, ஆறு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 555 பஸ்கள், 140 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளன.இப்பஸ்களை துவக்கி வைப்பதற்கு அடையாளமாக, தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஏழு பஸ்களை, முதல்வர் பழனிசாமி, கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.சென்னைக்கு சிவப்புசென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வழங்கப்பட்ட, 56 பஸ்களும் சிவப்பு நிறத்தில் உள்ளன. அவற்றின், ரப்பர் புஷ், பீடிங் உள்ளிட்ட பாகங்கள், கறுப்பு வண்ணத்தில் உள்ளன. கறுப்பு, சிவப்பு நிறங்கள், தி.மு.க.,வுக்கு பொருந்தும் என்பதால், எழுத்துக்கள் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டு, அ.தி.மு.க.,வை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன.சிறப்பு வசதிகள்புதிய பஸ்களில், முதியோர், கர்ப்பிணிகள் எளிதாக ஏறும் வகையில், அகலமான, தாழ்தள படிக்கட்டுகள் மற்றும் தானியங்கி கதவுகள் உள்ளன.நிற்பவர்களுக்கு அகலமான தளம், பயணியர் இறங்கும் இடத்தை அறிவிக்கும் ஒலிபெருக்கி கருவி; வழித்தடத்தை அறியும் வகையில், எல்.இ.டி.,யில் ஒளிரும் திரை, பஸ்சுக்குள் அதிகம் வெளிச்சம் தரும் குழல் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
No comments:
Post a Comment