Sunday, January 6, 2019

பெண் டாக்டர் தற்கொலை

Added : ஜன 06, 2019 02:11

தானே:மஹாராஷ்டிர மாநிலம், தானேயில், மருத்துவ உயர் படிப்பில் சேருவதற்காக, 'நீட்' நுழைவு தேர்வுக்கு படித்த, பெண் டாக்டர், மன அழுத்தத்தால், தற்கொலை செய்தார்.

மஹாராஷ்டிராவில், மருத்துவ உயர் படிப்புகளில் சேர, 'நீட்' எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு எழுதி, தேர்ச்சி பெறுவது கட்டாயமாக உள்ளது.இங்கு, தானே நகரில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் ஷிரமிஸ்டா சோம், 24. எம்.பி.பி.எஸ்., டாக்டரான ஷிரமிஸ்டா, எம்.டி., படிப்பில் சேர, 'நீட்' தேர்வுக்கு படித்தார்.

இந்நிலையில், நேற்று காலை, 12வது தளத்தில் உள்ள, தன் வீட்டில் இருந்து, ஷிரமிஸ்டா கீழே குதித்து தற்கொலை செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஷிரமிஸ்டாவின் உடலை பரிசோதனைக்கு அனுப்பினர். ஷிரமிஸ்டா எழுதிய கடிதத்தில், 'நுழைவு தேர்வுக்கு படிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, தற்கொலை செய்து கொள்கிறேன்' என எழுதப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024