தமிழ் வளர்ச்சிக்கு வேல்ஸ் பல்கலை பங்களிப்பு தொடரும்
Added : ஜன 06, 2019 23:56
சென்னை, : ''தமிழ் வளர்ச்சிக்கு, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு தொடரும்,'' என, அப்பல்கலையின் வேந்தர், ஐசரி கே.கணேஷ் தெரிவித்தார்.தென்னிந்திய நாணயவியல் கழக கருத்தரங்கில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்ட, 29ம் ஆண்டு கருத்தரங்கு மலரை பெற்ற, ஐசரி கே.கணேஷ் பேசியதாவது:தமிழக கவர்னர், மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக செயல்படுகிறார். டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல் கண்டுபிடிப்பு, கி.மு., 3ம் நுாற்றாண்டின் தமிழக வரலாற்றுக்கு, முக்கிய சான்றாக உள்ளது. தென்னிந்திய நாணயவியல் கழக ஆண்டு இதழை, கவர்னர் வெளியிட்டது, மிக பொருத்தமாக உள்ளது.தமிழுக்கும், தமிழர் வரலாற்றுக்கும் வலு சேர்க்கும் வகையில், இந்த கருத்தரங்கம் நடந்துள்ளது. இதில், வேல்ஸ் பல்கலை பங்கேற்றதில், பெருமை கொள்கிறேன். தமிழ் வளர்ச்சிக்கு, எங்கள் பல்கலையின் பங்களிப்பு தொடரும்.இவ்வாறு அவர் பேசினார்.தென்னிந்திய நாணயவியல் கழக செயலர், ஏ.வி.நரசிம்மமூர்த்தி பேசியதாவது:நாணயம் என்பது, வெறும் பொருள் வாங்கும் உலோக துண்டு மட்டுமல்ல; வெளியிடப்பட்ட காலத்தில், குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்க்கை முறை, கலாசாரம், வரலாறு உள்ளிட்டவற்றை காட்டும், கண்ணாடியாகவும் உள்ளது.இந்த கருத்தரங்கில், போலந்து நாட்டைச் சேர்ந்த, எமிலியா என்ற, ரோமானிய நாணய ஆய்வாளர் பங்கேற்றுள்ளார்; மேலும், உலக நாணய ஆய்வாளர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த கழகத்திற்கு, துவக்க காலத்தில் இருந்து, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் அளித்து வரும் பங்களிப்பை மறக்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.தென்னிந்திய நாணயவியல் கழக, 29ம் ஆண்டு கருத்தரங்க மலரின் ஆசிரியர், டி.சத்தியமூர்த்தி பேசியதாவது:இந்த ஆண்டு, 600க்கும் மேற்பட்ட புதிய நாணயங்கள் தொடர்பான தகவல்களை, தென்னிந்திய நாணயவியல் கழக உறுப்பினர்கள் சேகரித்துள்ளனர். அவற்றில், 133 கட்டுரைகள் வாசிக்கப்பட்டதில், 113 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.அவற்றில், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின், அதியமான் நாணயம்; ஏ.வி.நரசிம்மமூர்த்தியின், ராஸ்டிரகூடர் முத்திரை; கர்நாடக அகழாய்வில் கிடைத்த, கருட சின்னம் உள்ளிட்டவற்றை பற்றிய கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை.இவ்வாறு அவர் பேசினார்.கருத்தரங்க தலைவர், பி.வி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:ஒரு சிறிய வடிவமும், குறைந்த எடையும் உள்ள, தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்கள், நம் முன்னோர்களின் செறிந்த வரலாற்றை விவரிக்கின்றன. தென்னிந்திய நாணயவியல் கழகம், முற்காலத்தைச் சேர்ந்த, மிகவும் அரிய நாணயங்களை பற்றி ஆய்வு செய்து, கட்டுரைகள் வாயிலாக, வெளியுலகுக்கு தெரிவித்து வருகிறது. இந்த மாநாட்டிலும், அப்பணி சிறப்பாக நடந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், வேல்ஸ் பல்கலை மொழித்துறை டீன், பி.மகாலிங்கம்; தமிழ்த்துறை தலைவர் பன்னிருகை வடிவேலன், தென்னிந்திய நாணயவியல் சங்க செயற்குழு உறுப்பினர் ரவிசங்கர் மற்றும் நாணயவியல், தொல்லியல் துறை அறிஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment