Monday, January 14, 2019

ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று நிறுத்தம்

Added : ஜன 14, 2019 04:32

'இணையதளம் மேம்படுத்தப்படுவதால், டிக்கெட் முன்பதிவும், ரத்தும், இன்று சில மணி நேரம் தடைபடும்' என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின், www.irctc.co.in என்ற, இணையதளத்தில், தினமும் லட்சக்கணக்கானோர், டிக்கெட் முன்பதிவு செய்து, ரயில்களில் பயணிக்கின்றனர். பயணியர் வசதிக்காக, ரயில்வே துறையை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மேம்படுத்தப்படுவதால், தமிழகம் உட்பட, பல்வேறு பகுதிகளில் இருந்து, டில்லி சந்திப்புக்கு செல்லும் வழித்தட ரயில்களில், இன்று, 14ம் தேதி நள்ளிரவு முதல், அதிகாலை, 3:00 மணி வரை டிக்கெட் முன்பதிவும், ரத்தும் செய்ய இயலாது. அதே போல, மும்பை சந்திப்புக்கு செல்லும் வழித்தட ரயில்களில், இரவு, 10:45 முதல் காலை, 5:15 மணி வரை, டிக்கெட் முன்பதிவும், ரத்தும் செய்ய இயலாது என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024