Saturday, January 19, 2019


வேலம்மாள் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம்

Added : ஜன 19, 2019 02:30

மதுரை, மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் ஜன., 31 வரை புதிய நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 4வது தளம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவில் நடக்கிறது.முகாமில் இருதயம், மூளை நரம்பியல், சிறுநீரகவியல், ஜீரண மண்டலம், எலும்பியல் வல்லுனர்கள் மற்றும் மகளிர் சிறப்பு புற்றுநோய் நிபுணர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். பிற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் இதில் பங்கேற்று சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். பதிவு கட்டணத்தில் 50 சதவீதம் மற்றும் லேப், ரேடியாலஜி பரிசோதனைக்கு 10 சதவீதம் தள்ளுபடி உண்டு. இம்மருத்துவமனை டாக்டர்கள் இதுவரை 15 ஆயிரம் ஆஞ்சியோ, 2500 இருதய அறுவை சிகிச்சை, கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மருத்துவ முகாம் நேரம்: காலை 8:00 மணி - பகல் 1:00 மணி, மாலை 6:00 மணி - இரவு 8:00 மணி. தொடர்புக்கு: 97872 14441.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024