Friday, January 18, 2019

நெருங்கும் மக்களவைத் தேர்தல்: அதிகாரிகளை இடமாற்றம் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவு

By DIN | Published on : 17th January 2019 10:12 PM |


இந்திய தேர்தல் ஆணையம்

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய மாநில தலைமைச் செயலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில்,



"மக்களவைத் தேர்தல் மற்றும் ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், ஓடிசா மற்றும் சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பணிகளில் நேரடியாக தொடர்பில் இருக்கும் அதிகாரி ஒரு மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட நாட்களாக பணிபுரிந்தாலோ, அல்லது சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தாலோ தேர்தல் நேரத்தில் அவர்கள் இடமாற்றம் செய்யப்படும் நடைமுறையை தேர்தல் ஆணையம் கடைபிடித்து வருகிறது.

அதனால், தேர்தலுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் அதிகாரிகள்,
சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தாலோ
3 ஆண்டுகளை கடந்து ஒரே மாவட்டத்தில் பணிபுரிந்தாலோ
ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரியின் பணிக்காலம் மே 31, 2019-க்கு முன் 3 ஆண்டுகளை கடக்கும் பட்சத்தில்   அவர்கள் தற்போது பணிபுரியும் மாவட்டத்தில் இருந்து இடமாற்றம் செய்யவேண்டும். இதனை செயல்படுத்தும் போது, இடமாற்றம் செய்யப்படும் அதிகாரிகள் தங்களது சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்படாமல் இருக்கவேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024