Sunday, February 17, 2019

ஒரே நாளில் 91 ஆண்களுக்கு நவீன கருத்தடை மேடவாக்கம் ஆரம்ப சுகாதார மையம் சாதனை

Added : பிப் 17, 2019 01:17



சென்னை:'தினமலர்' நாளிதழ் உதவியுடன், ஒரே நாளில், 91 ஆண்களுக்கு நவீன கருத்தடை சிகிச்சை செய்து, தேசிய அளவிலான சாதனையை, மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் நிகழ்த்தியுள்ளது.

ஆண்களுக்கான குடும்ப நல நவீன கருத்தடை சிகிச்சையை, மத்திய - மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. அதன்படி, மேடவாக்கம், ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், பல ஆண்டுகளாக, ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆண்களுக்கான குடும்பநல நவீன கருத்தடை சிகிச்சை முகாம், நேற்று நடத்தப்பட்டது.

மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி, ரவிச்சந்திரன் தலைமையில், மருத்துவர்கள் செந்தில்குமார், சரண், பாலசுப்பிரமணியன், மதன், ரகுபதி ஆகியோர்,கருத்தடை சிகிச்சைஅளித்தனர்.இந்திய அளவில், ஒரே நாள் முகாமில், 40 பேருக்கு மேல் கருத்தடை அறுவை சிகிச்சை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால், மேடவாக்கம், ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று ஒரே நாளில், 91 பேருக்கு, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது, தேசிய சாதனையாக கருதப்படுகிறது.இந்த முகாமில், நவீன கருத்தடை செய்து கொண்ட நபர்களுக்கு, அரசு ஊக்கத் தொகையாக, 1,100 ரூபாயும், 'தினமலர்' நாளிதழ், வேல்ஸ் பல்கலைக் கழகம் சார்பில், அரை கிராம் தங்கம் மற்றும் 25 கிராம் வெள்ளி நாணயமும் இலவசமாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், வேல்ஸ் பல்கலை துணைவேந்தர், ஐசரி கணேஷ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பழனி, வட்டார மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று, பயனாளிகளுக்கு, ஊக்கத்தொகை மற்றும் இலவச நாணயங்களை வழங்கினர்.சிகிச்சை மேற்கொண்ட
வர்களுக்கு, காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.09.2024