Sunday, February 17, 2019

மூன்று வங்கிகளுக்கு ரூ. 3.5 கோடி அபராதம்

Added : பிப் 16, 2019 20:17

இந்திய ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுகளை கடைபிடிக்காத, மூன்று தேசிய வங்கிகளுக்கு, 3.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, ஆர்.பி.ஐ., வெளியிட்ட தகவல்:வங்கிகளில் பணம் கையாள்வது, வங்கிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் மற்றும் கணக்குகளை மறுகட்டமைப்பு செய்தல் போன்றவற்றில், ஆர்.பி.ஐ., சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.இந்த உத்தரவுகளை, பாங்க் ஆப் இந்தியா, ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை பின்பற்றவில்லை. இதற்காக, பாங்க் ஆப் இந்தியாவுக்கு, 1 கோடி; ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ் வங்கிக்கு, 1.5 கோடி; பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-நமது நிருபர்-

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024