Thursday, August 15, 2019


80 ஐ கற்பழிக்க முயன்ற 20 க்கு மூன்றுஆண்டு சிறை

Added : ஆக 15, 2019 02:18 

சென்னை:துாங்கிக் கொண்டிருந்த, 80 வயது மூதாட்டியை, கற்பழிக்க முயன்ற, 20 வயது இளைஞனுக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை மகளிர் நீதிமன்றம், தீர்ப்பு வழங்கி உள்ளது.
கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர், சரவணன், 24. அதே பகுதி, மீனாம்பாள் நகரைச் சேர்ந்தவர், 80 வயது மூதாட்டி. 2015ல், பகலில் கதவை திறந்து வைத்து, வீட்டில் துாங்கினார்.அப்போது, வீட்டிற்குள் நுழைந்த சரவணன், அவரை கற்பழிக்க முயன்றார். மூதாட்டியின் அலறல் கேட்டு, அவரது மகன் ஓடி வந்தார். அதற்குள், சரவணன் தப்பி ஓடினார். ஆர்.கே.நகர் போலீசார், சரவணனை கைது செய்தனர்.வழக்கு விசாரணை, சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி, மஞ்சுளா முன் நடந்து வந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர், ஸ்ரீலேகா வாதாடினார்.விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி, மஞ்சுளா, சரவணனுக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 30 ஆயி-ரம் ரூபாய் அபராதமும் விதித்து, நேற்று தீர்ப்பு வழங்கினார்.

No comments:

Post a Comment

Med seats in TN may not increase, tough competition expected

Med seats in TN may not increase, tough competition expected Pushpa.Narayan@timesofindia.com 18.04.2025 Chennai : The increase of 50 undergr...