பயிற்சி டாக்டர்கள் பணி புறக்கணிப்பு
Added : ஆக 15, 2019 01:34
சென்னை : இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, என்.எம்.சி., என்ற தேசிய மருத்துவ ஆணையத்தை, மத்திய அரசு ஏற்படுத்துகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக மருத்துவ மாணவர் சங்கம் சார்பில், மாநிலம் முழுவதும், எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை மருத்துவ கல்லுாரி, கோவை, திருச்சி, தஞ்சை, கன்னியாகுமரி ஆகிய மருத்துவ கல்லுாரிகளில், பயிற்சி டாக்டர்கள், அரசு மருத்துவமனைகளில், நேற்று, பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், போதிய டாக்டர்கள் இல்லாததால், புறநோயாளிகள் பிரிவில், நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

No comments:
Post a Comment