Tuesday, October 1, 2019

31 புதிய மருத்துவ கல்லூரிகளில் தமிழகத்துக்கு 6!

Updated : அக் 01, 2019 00:13 | Added : அக் 01, 2019 00:04

புதுடில்லி: நாடு முழுவதிலும் புதிதாக துவங்க இருக்கும் 31 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளில் தமிழ்நாட்டிற்கு 6 கல்லூரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டில்லியில் செப்.,26ல் நடந்த தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடந்தது; கூட்டத்தில் நாடு முழுவதும் புதிதாக துவங்க உள்ள 31 மருத்துவ கல்லூரிகளின் பட்டியல் முடிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும், 6 கல்லூரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக ராஜஸ்தான் மற்றும் ம.பி., மாநிலத்தில் தலா 10 கல்லூரிகள் அமைய உள்ளன. தமிழகத்தில் 6, காஷ்மீரில் 2, உ.பி.,யில் 3 என மொத்தம் 31 புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.







எங்கெங்கு:

தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைய உள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024