Tuesday, October 1, 2019

அடேயப்பா.. 36 மணி நேரத்தில் ரூ.750 கோடிக்கு ஸ்மார்ட் போன்கள் விற்பனை! By DIN | Published on : 30th September 2019 05:44 PM |

 

வர்த்தகத் திருவிழா

சென்னை: ஒன்றரை நாளில் (36 மணி நேரம்) ரூ.750 கோடிக்கு ஸ்மார்ட் போன்கள் விற்பனை ஆகியுள்ளதாக இணைய வர்த்தக தளமான அமேசான் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் இரண்டும் இணைய வர்த்தகத்தில் கோலோச்சி நிற்கும் தளங்களாகும். இவ்விரண்டுமே வருடத்தில் நானகைந்து தடவை இணையத்தில் வர்த்தகத் திருவிழாவை நடத்துவ வழக்கம். அந்த சமயத்தில் மிக குறுகிய காலத்திற்கு பல்வேறு விதமான வீட்டு உபயோகப் பொருட்கள், மின்ணனு சாதனங்கள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களும் மிக அதிக தள்ளுபடியில் கிடைக்கும்.

இம்முறை அமேசான் நிறுவனம் சார்பாக ஞாயிற்றுக் கிழமை (29.09.19) துவங்கி, எதிர்வரும் 4-ஆம் தேதி வரை 'தி கிரேட் இந்தியன் ஷாப்பிங் பெஸ்டிவல்' என்னும் பெயரில் இணையத்தில் வர்த்தகத் திருவிழா நடந்து வருகிறது.

அதன்படி அந்த வர்த்தகம் துவங்கிய ஒன்றரை நாளில் (36 மணி நேரம்) ரூ.750 கோடிக்கு ஸ்மார்ட் போன்கள் விற்பனை ஆகியுள்ளதாக அமேசான் தற்போது தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024