Friday, October 25, 2019

Bus info


24 மணி நேரமும் இணைப்பு பஸ்

பதிவு செய்த நாள்: அக் 24,2019 06:24

சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட, வெளியூர் செல்வோருக்கு வசதியாக, 24 மணி நேரமும், மாநகர பஸ்கள் இயக்கப்பட உள்ளன

தீபாவளி பண்டிகையை, தங்களின் சொந்த ஊர்களில் கொண்டாட உள்ளோருக்காக, இன்று முதல், மூன்று நாட்களுக்கு, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வெளியூர் செல்வோருக்கு வசதியாக, கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர், தாம்பரம் ஆகிய இடங்களில், சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு, வெவ்வேறு பகுதிகளுக்கான பஸ்கள், பிரித்து அனுப்பப்படுகின்றன.அந்த பஸ்களுக்கு செல்ல வசதியாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஐந்து சிறப்பு பஸ் நிலையங்களுக்கு, இன்று முதல், நாளை மறுநாள் வரை, 310 மாநகர பஸ்களை, இணைப்பு பஸ்களாக மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024