Friday, October 25, 2019

Bank

ரூ.2,000 நோட்டு செல்லாதா?

பதிவு செய்த நாள்: அக் 24,2019 07:04

சென்னை: 'ஜனவரி 1 முதல் 2,000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலியானது' என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'ரிசர்வ் வங்கி ஜனவரி 1 முதல் 1,000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட உள்ளது. இதனால் 2,000 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும். எனவே ஒவ்வொருவரும் தங்களிடமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை உடனடியாக மாற்றி விட வேண்டும்' என சமூக வலை தளங்களில் ஆடிட்டர் ஒருவர் பெயரில் தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது. அதுபோல 1,000 ரூபாய் நோட்டு வெளியிடுதல் 2,000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுதல் போன்ற எந்த அறிவிப்பையும் ரிசர்வ் வங்கியோ மத்திய அரசோ வெளியிடவில்லை. மக்களை குழப்பவே இது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப் படுகின்றன.

சமீபத்தில் புதிய 1,000 ரூபாய் நோட்டு புகைப்படம் உலா வந்தது. தற்போது இது போன்ற தகவல்கள் பரவுகின்றன. இவற்றை பொது மக்கள் நம்ப வேண்டாம். மத்திய அரசும் போலீசாரும் இது போன்ற போலி தகவல்களை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats 03.06.2026 Written By : Barsha...