Friday, October 25, 2019

Train info

ரயில் தண்டோரா புதிய செயலி அறிமுகம்

பதிவு செய்த நாள்: அக் 23,2019 04:56

சென்னை: ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணியர் வசதிக்காக, தெற்கு ரயில்வேயில், 'ரயில் தண்டோரா' என்ற புதிய செயலி துவக்கி வைக்கப்பட்டு உள்ளது.

ரயில்வே ஊழியர்கள், பயணியர் மற்றும் ஒப்பந்ததாரர்களின் விரைவான பரிவர்த்தனைகளுக்கு, ரயில் தண்டோரா என்ற புதிய செயலி உதவியாக இருக்கும். பயணிருக்கான வசதிகள், பயண கட்டணங்கள், உணவு மற்றும் சரக்கு பிரிவு சேவைகள், கட்டணங்கள், பொது விண்ணப்பங்கள் உள்ளிட்ட, பல்வேறு வசதிகள் குறித்தும், இச்செயலியில் தெரிந்து கொள்ளலாம்.

ரயில்வே ஊழியர்களுக்கான சுற்றறிக்கைகள், சலுகை விண்ணப்ப படிவங்கள், வருங்கால வைப்பு நிதி விண்ணப்ப படிவங்கள் குறித்தம் தெரிந்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள், வணிக கையேடு மற்றும் வணிக குறியீடுகள் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். ரயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு, இச்செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயண அட்டவணை, பயண பட்டியல் இறுதி விபரங்களை, ஆப் - லைனிலும் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024