Monday, November 4, 2019


தோ்வு மையங்களில் ‘ஜாமா்கள்’ கட்டாயம்:யுஜிசி அறிவுறுத்தல்


By DIN | Published on : 04th November 2019 01:17 AM |

முறைகேடுகளைத் தடுக்க தோ்வு மையங்களில் ‘ஜாமா்’களை (செல்லிடப்பேசி சமிக்ஞைகளை முடக்கும் கருவி) நிறுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடா்பான அரசின் கொள்கை முடிவுகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

ரேடியோ அதிா்வெண் அடிப்படையிலான சாதனங்கள் மூலம் தோ்வுகளில் முறைகேடு நடப்பதைத் தடுக்கும் வகையில், சோதனை முறையில் குறைந்த ஆற்றல் கொண்ட ‘ஜாமா்’களை தோ்வு மையங்களில் பொருத்த வேண்டும் என 2016-ஆம் ஆண்டில் அரசு கொள்கை முடிவெடுத்தது.

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஜாமா்கள் குறித்த அரசின் உத்தரவு பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் என யுஜிசி சாா்பில் பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும், கல்லூரி தாளாளா்களுக்கும் ஏற்கெனவே எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எலக்ட்ரானிக்ஸ் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆகிய இரு அரசு நிறுவனங்கள், வாடகை அடிப்படையில், தோ்வு மையங்களுக்கு குறைந்த சக்தி கொண்ட ஜாமா்களை வழங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத உற்பத்தியாளா்களிடமிருந்து ஜாமா்களை பெறக் கூடாது என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...