Wednesday, January 22, 2020

புத்தக கண்காட்சி கோலாகல நிறைவு; ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

Added : ஜன 22, 2020 02:17

சென்னை : தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம், புத்தக கண்காட்சி நடத்த, 'பபாசி' நிர்வாகத்திற்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம், 5 லட்சம் ரூபாய் வழங்கினார்.

சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., அரங்கில், சென்னை புத்தக கண்காட்சி, கடந்த, 9ம் தேதி துவங்கி, நேற்று நிறைவடைந்தது.நிறைவு விழாவில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:தமிழர்கள், கல்வெட்டுகளிலும், பனை ஓலைகளிலும், அதன் தொடர்ச்சியாக ஏடுகளிலும், தமிழை எழுதி வளர்த்தனர். தமிழர்கள், படிப்பதிலும், எழுதுவதிலும் எப்போதுமே சிறப்புடன் இருந்துள்ளனர்.

புதிய எழுத்தாளர்கள்,நாட்டின் பழமை, வரலாறு, சமூக நீதி, நாட்டு பற்று உள்ளிட்டவற்றை வளர்க்கும் வகையில் எழுத வேண்டும். தங்களின் எழுத்துகளுக்கு வரவேற்பு கிடைக்காவிட்டாலும், தொடர்ந்து முயற்சித்து, சமூகத்தை முன்னேற்ற வேண்டும். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான, 'பபாசி' அமைப்பில், தொடர்ந்து நுால்களை பதிப்பித்து வரும், அனைவரையும் பாராட்டுகிறேன். பதிப்பு பணி, தொழில் அல்ல; சமூக பணி. 25 ஆண்டுகள், தொடர்ந்து பதிப்பு துறையில் உள்ளவர்களுக்கு, விருது வழங்குவதில், பெருமை அடைகிறேன்.

சென்னையில், புத்தக கண்காட்சி நடத்த, ஒவ்வொரு ஆண்டும், 75 லட்சம் ரூபாய் வழங்குவதாக, முதல்வர் அறிவித்தார். தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம், புத்தக கண்காட்சி நடத்தும் வகையில், பபாசி நிர்வாகத்தினர், மூலதன நிதியை உருவாக்க வேண்டும். அதற்கு ஆதாரமாக, 5 லட்சம் ரூபாய் நிதியை வழங்குகிறேன். இந்த சிறு தொகை, முதல் ஆதாரம் தான்; தொடர்ந்து வழங்குவேன்.இவ்வாறு, அவர் பேசினார்.

புத்தக கண்காட்சி குறித்து, 'பபாசி' நிர்வாகத்தினர் கூறுகையில், '13 நாட்கள் நடந்த புத்தக கண்காட்சிக்கு, 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். 800 புத்தக அரங்குகளில், 20 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகின. இவை, கடந்தாண்டை விட, 20 சதவீதம் அதிகம்' என்றனர்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...