Sunday, February 9, 2020

குரூப் - 2' தேர்வில் தவறு நடக்கவில்லை: டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்

Added : பிப் 08, 2020 23:45

சென்னை: 'குரூப் - 2 தேர்வில், தவறு ஏதும் நடக்கவில்லை' என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தேர்வாணையம் ெவளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:சமீபத்தில், குரூப் - 2 தேர்வு முடிவுகள் ெவளியிடப்பட்டன. இதில், 1997ல் பிறந்தவர்கள், அதிகமாக தேர்ச்சி பெற்றிருப்பது, சந்தேகத்திற்குரியதாக உள்ளது என, செய்திகள் ெவளியாகின. இது குறித்து, தேர்வாணையம் ஆய்வு செய்ததில், தவறு எதுவும் நடக்கவில்லை என்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி, அடுத்த வாரம் தொகுதி இரண்டுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்று, தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் முடிந்ததும், தேர்வர்களின் முழு விபரமும், தேர்வாணைய இணையதளத்தில் ெவளியிடப்படும்.

அதேபோல், ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான, இளநிலை கட்டடக் கலைஞர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட, 39 பேரில், சென்னை மையத்திலிருந்து மட்டும், 31 பேர் தேர்வு செய்யப்பட்டதாகவும், இதில் தவறு நடந்திருக்கலாம் எனவும், சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து ஆய்வு நடத்தியதில், தவறு நடக்கவில்லை என்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது; 31 பேரும் வெவ்வேறு தேர்வுக்கூடங்களில், தேர்வு எழுதி உள்ளனர். இப்பணிகளுக்கான கலந்தாய்வு முடிந்துள்ளது. தேர்வு நடவடிக்கை முழுமையாக முடிந்ததும், தேர்வர்களின் முழு விபரங்களும், இணையதளத்தில் ெவளியிடப்படும்.யூகங்கள் அடிப்படையிலான செய்திகளால், நல்ல முறையில் தேர்வுக்கு தயாராகி, நேர்மையாக பங்கேற்கும் தேர்வர்களின் திறமையை குறைத்து கூறுவது வருத்தத்திற்குரியது.

இதுபோன்ற உண்மைக்கு புறம்பான வதந்திகளை பரப்புவோர் மீது, தேர்வாணையம் தன் கண்டனத்தை பதிவு செய்கிறது.தகுந்த ஆதாரங்களுடன் பெறப்படும் புகார்கள் மீது, தேர்வாணையம் உடனடி யாக ஆய்வு செய்யும். தவறு நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருந்தால், குற்றவியல் நடவடிக்கை எடுக்க, உறுதுணையாக இருந்து வருகிறது. இனிவரும் காலங்களிலும், தேர்வாணையத்தின் நிலைப்பாட்டில், எவ்வித மாற்றமும் இருக்காது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024