530 டாக்டர்கள், 1,000 நர்ஸ்கள் புதிதாக தேர்வு
Added : மார் 27, 2020 20:45
சென்னை :கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத்துறைக்கு, புதிதாக, 530 டாக்டர்கள்; 1,000 நர்ஸ்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று நாட்களில் பணியில் சேர, உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார துறை சார்பில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இதன் ஒரு பகுதியாக, சுகாதார துறையில், காலிப் பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, புதிதாக, 530 டாக்டர்கள், 1,508 லேப் டெக்னீஷியன்கள், 1,000 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பணி ஆணை கிடைத்த, மூன்று நாட்களுக்குள், உடனடியாக பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், புதிதாக, 200 அவசர கால ஊர்திகளை, உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment