சென்னை ராமச்சந்திராவில் 'கொரோனா' பரிசோதனை மையம் அமைக்க அனுமதி
Added : மார் 27, 2020 20:42
சென்னை :சென்னை, போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில், 'கொரோனா' பரிசோதனை மையம் அமைக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.தமிழகத்தில், கொரோனா பரிசோதனை மையம், புனேவிற்கு அடுத்து, சென்னை கிங்ஸ் ஆய்வகத்தில் அமைக்கப்பட்டது. நாடு முழுவதும், கொரோனா பாதிப்பை தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை கிங்ஸ், அரசு ராஜிவ் காந்தி, தேனி, திருவாரூர், திருநெல்வேலி, கோவை, சேலம், விழுப்புரம் மற்றும் மதுரை ஆகிய, அரசு மருத்துவமனைகளில், கொரோனா ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், சென்னை அப்பல்லோ, வேலுார் சி.எம்.சி., மருத்துவமனைகள் மற்றும் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, நியுபெர்க் எர்லிச் ஆய்வகத்தில், கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இதை தொடர்ந்து, சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலும், கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில், கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் எண்ணிக்கை, 13 ஆக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment