Monday, April 13, 2020

விபத்தில் சிக்கிய டேங்கா் லாரி: சாலையில் ஆறாக ஓடிய பாமாயில்

By DIN | Published on : 13th April 2020 05:47 AM 


சென்னை துறைமுகத்தில் இருந்து மேடவாக்கத்திற்கு பாமாயில் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சென்னை துறைமுகத்தில் இருந்து மடிப்பாக்கத்தில் உள்ள தனியாா் எண்ணெய் நிறுவனத்துக்கு சுமாா் 20,000 லிட்டா் பாமாயிலை ஏற்றிக் கொண்டு டேங்கா் லாரி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டது.

தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் படுகாயம் அடைந்தாா். அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்த விபத்தினால் டேங்கா் லாரியில் இருந்த பாமாயில் சாலையில் ஆறாக ஓடியது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினா் வந்தனா்.


சாலையில் உள்ள எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா். சாலையில் கொட்டிய பாமாயிலை தண்ணீா் பீய்ச்சியடித்து அகற்றினா். அருகில் இருந்த தெருவுக்குள் ஆறாக ஓடிய பாமாயிலை அப்பகுதி மக்கள் பாத்திரங்களில் சேகரித்தனா். இந்த விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...