Monday, August 3, 2020

வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை வெளியீடு

வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை வெளியீடு   3.8.2020

புது தில்லி: வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது

அதன்படி வெளிநாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்

குடும்ப உறுப்பினர் மரணம், உடல்நலக்குறைவு அல்லது பயணி கர்ப்பிணி என்றால் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர்

ஆனால் பயண நேரத்திற்கு 96 மணி நேரத்திற்கு முன்னதாக பிசிஆர் பரிசோதனை செய்து கொண்டிருக்க வேண்டும்.

பிசிஆர் பரிசோதனை மூலம் கரோனா இல்லையென சம்பந்தப்பட்டவர் சான்றளித்து வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.

இந்தப் புதிய விதிகள் அனைத்தும் வரும் 8ஆம் தேதி அமலுக்கு வருகிறது .
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024