ஊழல் வழக்கு உள்ளவர்களுக்கு ஓய்வு வயதை நீட்டிக்க தடையில்லை
Added : ஆக 08, 2020 00:09
சென்னை; 'ஊழல் வழக்கு உள்ள அரசு ஊழியர்களுக்கு, ஓய்வு வயதை நீட்டிக்கக்கூடாது' என கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் கற்பகம் என்பவர் தாக்கல் செய்த மனு:அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை, 59 ஆக உயர்த்தி, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதால், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களுக்கும், இந்த சலுகை கிடைக்கிறது; இது, சரியல்ல.குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஊழியர்களை, அரசு கருத்தில் கொள்ளவில்லை.அரசாணைஅனைத்து ஊழியர்களுக்கும் பொதுவாக பொருந்தும் வகையில், அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழல்குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு பொருந்தாத வகையில், அரசாணை இருக்க வேண்டும்.எனவே, ஊழல் வழக்கு உள்ளவர்களுக்கு, இந்த சலுகை பொருந்தாது என, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. அரசு தரப்பில், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் வாதாடினார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:துறை நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் ஊழியர், தற்போது பிறப்பிக்கப்பட்ட அரசாணையால், ஓய்வு வயதுக்கு பின் பணியில் நீடித்தாலும்,குற்றச்சாட்டுகளில் இருந்து, அவரை விடுவித்து விட்டதாக கருத முடியாது. துறை விசாரணையில் முடிவு வருவதற்காக தான், ஓய்வு வயதுக்கு பின்னும், அவரை பணியில் தக்க வைக்கின்றனர்.ஊழியருக்கு எதிராக புகார் அளிப்பதாலோ, ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருப்பதாலோ மட்டுமே, அவர் குற்றவாளி என அர்த்தமாகி விடாது; குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை, அவரை குற்றவாளி எனக்கூற முடியாது என்ற, அரசு பிளீடரின் வாதத்தில் அழுத்தம் உள்ளது.தள்ளுபடிஒழுங்கு நடவடிக்கையின் முடிவில், குற்றச்சாட்டுகளில் இருந்து, அந்தஊழியர் விடுவிக்கப்படலாம்.
அதனால், குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கிற ஊழியர்களை எல்லாம், குற்றம் செய்தவர்களாக மனுதாரர் கருத முடியாது.இவ்வழக்கில், எந்த நிவாரணமும் வழங்க முடியாது. சரியான விபரங்களுடன் வழக்கு தொடரப்படவில்லை.நீதிமன்றத்தின் நேரத்தை, மனுதாரர் வீணடித்துள்ளார். வழக்கு செலவு தொகை விதிக்க, இது தகுதியான வழக்கு. வழக்கின் தன்மை, சூழ்நிலை கருதி, வழக்கு செலவு தொகை விதிக்கவில்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழக அரசின் தற்காலிக பெண் ஊழியருக்கும் 9 மாத பேறுகால விடுப்பு: விதிகளில் திருத்தம் செய்து அரசாணை
maternity-leave
தமிழக அரசின் நிரந்தர பணியில் இல்லாத திருமணமான பெண் ஊழியர்களுக்கும் 9 மாதங்கள் பேறுகால விடுப்பு அளிக்கும் வகையில் அரசு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறைசெயலர் ஸ்வர்ணா வெளியிட்டஅரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசில் நிரந்தர பணியில் உள்ள பெண் ஊழியர்கள், ஆசிரியைகளுக்கு பேறுகால விடுப்பு 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக உயர்த்தப்பட்டது. இந்த சலுகை தற்போது தமிழக அரசில் தற்காலிகப் பணியில் உள்ள பெண் ஊழியர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சில துறைகளில் அவசர நிலை ஏற்படும்போது தற்காலிகமாக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களில் பெண் ஊழியர்களும் அடங்குவர். இவர்கள் தங்கள் பேறுகாலத்தின்போது 270 நாட்கள், அதாவது 9 மாதங்களுக்கு குறைவாக இருப்பின் அவர்களுக்கு முழு சம்பளத்துடன் பேறுகால விடுப்பை சம்பந்தப்பட்ட துறைஅதிகாரி வழங்கலாம். அதேநேரம், அந்த பெண் பணியாளர் குறைந்தபட்சம் ஓராண்டு பணியை நிறைவு செய்திருக்க வேண்டும்.
மேலும், 2 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பெண்களுக்கும், முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பெற்ற பெண்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படும். குழந்தையை தத்தெடுத்து வளர்த்தால் இந்த சலுகை இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment