Wednesday, December 2, 2020

வேளாண் பல்கலை டிச.,17ல் பட்டமளிப்பு

வேளாண் பல்கலை டிச.,17ல் பட்டமளிப்பு

Added : டிச 02, 2020 02:09

கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப் பட்டு இருந்த பட்டமளிப்பு விழா, டிச., 17ம் தேதி நடக்கிறது.இதில், கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

பட்டமளிப்பு விழா, குளிரூட்டப்பட்ட அரங்கில் நடைபெறுவது வழக்கம். தற்போது, பல்கலை கால்பந்து மைதானத்தில் சமூக இடைவெளியுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, புல்வெளி அப்புறப்படுத்தி, மேடை, இருக்கைகள், ஒளி விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. விழாவில் பட்டம் பெறும் மாணவர்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024