Thursday, December 17, 2020

மருத்துவ படிப்பு நிர்வாக இடத்திற்கு 19ல் கவுன்சிலிங்


DINAMALAR

மருத்துவ படிப்பு நிர்வாக இடத்திற்கு 19ல் கவுன்சிலிங்

Added : டிச 16, 2020 22:34

சென்னை:மருத்துவ படிப்பில், சுயநிதி கல்லுாரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை, நாளை மறுதினம்துவங்குகிறது.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை, நேரு விளையாட்டரங்கில் நடந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு, சிறப்பு பிரிவு, பொதுப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீட்டு என, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்து, அரசு ஒதுக்கீட்டில், 921 இடங்கள் காலியாக உள்ளன.

இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில், 952 எம்.பி.பி.எஸ்., - 695 பி.டி.எஸ்., இடங்களுக்கான கவுன்சிலிங், நாளை மறுதினம் முதல், 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. இடையில் வரும், ஞாயிற்றுக் கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 31.12.2024