Thursday, July 15, 2021

சிறுமிக்கான சிகிச்சை மருந்துக்கான இறக்குமதி வரி ரூ.6 கோடி ரத்து:சிறுமியின் பெற்றோர் தகவல்


சிறுமிக்கான சிகிச்சை மருந்துக்கான இறக்குமதி வரி ரூ.6 கோடி ரத்து:சிறுமியின் பெற்றோர் தகவல்

Added : ஜூலை 15, 2021 01:03

குமாரபாளையம்:நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செலுத்தப்பட வேண்டிய ஊசி மருந்து இறக்குமதி வரியை, மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக, பெற்றோர் தகவல் தெரிவித்தனர்.

சிறுமி மித்ராவின் தந்தை சதீஷ்குமார் கூறியதாவது;எங்கள் மகள் மித்ரா தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இவரது சிகிச்சைக்காக ஸ்விட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் ஊசி மருந்து தேவைப்பட்டது. இதன் விலை, 16 கோடி ரூபாய். இதை இந்தியாவில் இறக்குமதி செய்ய, 6 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று கூறினர்.

பொதுமக்கள் கொடுத்த நன்கொடை மூலம், 16 கோடி ரூபாய் சேர்ந்து விட்டது. இறக்குமதி வரியை ரத்து செய்தால் மட்டுமே இந்த மருந்து எங்கள் மகளுக்கு கிடைக்கும் எனும் நிலை இருந்து வந்தது. பிரதமர் உள்ளிட்ட அனைத்து தலைவர்கள், அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்திருந்தோம்.தற்போது, இறக்குமதி வரி, 6 கோடி ரூபாயை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதற்கான கடிதம் அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறினர். பெங்களூரு மருத்துவமனைக்கு சென்று, மருத்துவமனை மூலமாக மருந்து 'ஆர்டர்' செய்வோம். ஓரிரு நாட்களில் மருந்து கிடைத்ததும் மித்ராவுக்கு அந்த மருந்து செலுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024