Monday, July 19, 2021

மத்திய பல்கலையில் நுழைவு தேர்வு இல்லை


மத்திய பல்கலையில் நுழைவு தேர்வு இல்லை

Added : ஜூலை 19, 2021 05:05

புதுடில்லி-'மத்திய பல்கலைக்கழகங்களில், இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு, நடப்பாண்டு நடத்தப்படாது' என, பல்கலைக்கழக மானிய குழு அறிவித்து உள்ளது.'நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் இளநிலை பட்டப்படிப்பில் சேர, பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்' என, புதிய கல்விக் கொள்கையின் கீழ், மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.இந்நிலையில், 'கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, மத்திய பல்கலையின் 2021 - 22ம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை, நுழைவுத் தேர்வு இன்றி, முந்தைய நடைமுறையின் கீழ் நடத்தப்படும். 2022 - 23ம் கல்வியாண்டில், நுழைவுத் தேர்வு நடத்தப்பட வாய்ப்புள்ளது' என, பல்கலை மானிய குழு நேற்று அறிவித்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024