Friday, June 30, 2017

"18 வயசு ஆகிருச்சா?" - ஃபேஸ்புக் கேட்கப்போகும் கேள்விக்குத் தயாராகுங்கள்! 

கருப்பு

உலகின் முன்னணி சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக்கில், வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் அப்டேட் செய்வதுதான் பெரும்பாலானவர்களின் வழக்கம். 'சிங்கிள்' சின்னத்தம்பியாய் இருக்கும் ஜென்Z தலைமுறை இளைஞர் ஒருவர், கமிட்டட் கைப்பிள்ளையாக மாறினால், அந்த விஷயத்தை முதல் வேலையாக ஸ்டேட்டஸ் போடுவதுதான் வழக்கம். அந்த அளவுக்கு இளம்தலைமுறையினர் பலரின் வாழ்வோடு ஃபேஸ்புக் ஒன்றிப்போய்விட்டது. ஃபேஸ்புக்கை திறந்தாலே "What's on your mind" என ஸ்டேட்டஸ் பாரில் கேள்வி கேட்பதைப் பார்த்திருப்போம். இனி 18 வயது நிரம்பிய இந்திய வாக்காளர்கள் அனைவரிடமும் புதிதாக கேள்வியொன்றைக் கேட்கப்போகிறது ஃபேஸ்புக்.



இந்தியத் தேர்தல் ஆணையமும், ஃபேஸ்புக் நிறுவனமும் இணைந்து 18 வயது நிரம்பிய வாக்குரிமை பெற்றவர்களிடம், வாக்காளர் அடையாள அட்டை பெறுவது குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தவிருக்கின்றன. இதன்படி, 18 வயது நிரம்பிய இந்திய வாக்காளர்களிடம் "வாக்காளர் அடையாள அட்டைக்கு இன்னும் விண்ணப்பிக்கவில்லையா?" என ஃபேஸ்புக் கேள்வி கேட்கும். வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 'Register Now' பட்டனைக் கிளிக் செய்தால், தேர்தல் ஆணையத்தின் National Voters’ Services Portal (http://www.nvsp.in/) தளத்திற்கு அவர்கள் ரீ-டேரக்ட் செய்யப்படுவார்கள். ஏற்கெனவே வாக்காளர் அடையாள அட்டைக்குப் பதிவு செய்திருப்பவர்கள், 'Share You're Registered' பட்டனைக் கிளிக் செய்தால், அது ஸ்டேட்டஸாக இடப்படும். ஒருவர் இப்படிப் பகிர்வதால், அவரின் ஃபேஸ்புக் நண்பர்களுக்கும் இத்தகவல் பரவத்தொடங்கும். இதனால் வாக்காளர் அடையாள அட்டைக்குப் பதிவு செய்வது பற்றிய விழிப்புஉணர்வு ஏற்படும்.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்துமுடிந்தது நினைவிருக்கலாம். வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக, அம்மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு, வாக்குப்பதிவு குறித்து ஃபேஸ்புக் இதேபோல நினைவூட்டியது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 1-ம் தேதியிலிருந்து 4-ம் தேதி வரை இந்தியப் பயனாளர்கள் அனைவருக்கும் இந்த ரிமைண்ட்டர் ஃபேஸ்புக்கில் காண்பிக்கப்படும். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், பஞ்சாபி, குஜராத்தி, உருது, அஸ்ஸாமீஸ், மராத்தி, ஒரியா, ஹிந்தி போன்ற 13 மொழிகளில் இந்த ரிமைண்ட்டர் காண்பிக்கப்படும். உதாரணமாக, தமிழகத்தில் இருக்கும் ஒரு நபர் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார் என்றால், அவருக்கு இந்த ரிமைண்ட்டர் தமிழில் காண்பிக்கப்படும்.

இது குறித்து இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, "விடுபட்ட வாக்காளர்கள்... குறிப்பாக முதல்முறையாக வாக்குப்பதிவு செய்யவிருப்பவர்கள் பதிவு செய்ய வசதியாக, இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாட்டைச் செய்யவிருக்கிறது. 'எந்த வாக்காளரும் விடுபடக்கூடாது' என்ற தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் முக்கிய முன்னெடுப்பாக இது இருக்கும்" எனத்தெரிவித்துள்ளார்.

200 கோடி மாதாந்திரப் பயனாளர்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி மார்க் சக்கர்பெர்க் சமீபத்தில் தெரிவித்தார். அந்நிறுவனத்தைப் பொறுத்தவரை, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியச் சந்தைதான் மிகப்பெரியது. இந்தியாவில் மட்டும் சுமார் 18 கோடிப்பேர் ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றனர். ஃபேஸ்புக் மூலம் விழிப்புஉணர்வு ஏற்படுத்தும்போது அதன் ரீச் அதிகமாக இருக்கும் என்பதால், இந்தியத் தேர்தல் ஆணையம் அந்நிறுவனத்துடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஃபேஸ்புக் கேட்கப்போகும் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா பாஸ்!
‘ஆந்திராவிடமிருந்து தமிழகம் கற்றுக்கொள்ளட்டும்!’ கொதிக்கும் மருத்துவர்கள் 

இரா. குருபிரசாத்

மருத்துவப் படிப்புகள் என்றாலே, சர்ச்சைகளுக்கும் பிரச்னைகளுக்கும் பஞ்சமில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 'எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம்' என்ற அறிவிப்பு ஒருபுறம் இருக்க, ' டிஎம், எம்சிஹெச் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தும் நுழைவுத் தேர்வில், வெளி மாநிலத்தவர்களும் கலந்துகொள்ளலாம்' என்ற அறிவிப்பு, மருத்துவர்களிடையே கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



முதுநிலை மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள 1,066 இடங்களில் 50 சதவிகிதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் 50 சதவிகிதம் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்பட்டுவருகிறது. இதில், மாநில அரசுக்கு வழங்கப்பட்ட 50 சதவிகித ஒதுக்கீட்டில், 25 சதவிகிதத்தை அரசு மருத்துவர்களுக்கும், மீதமுள்ள 25 சதவிகிதத்தை தனியார் மருத்துவர்களுக்கும் ஒதுக்கப்படுவது நடைமுறையாக இருந்துவந்தது. இந்த இடங்களும் நுழைவுத்தேர்வு மூலமே நிரப்பப்பட்டுவந்தன. முக்கியமாக, தேர்வு எழுதும் மருத்துவர்களுக்குப் பணி அனுபவ அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுவந்தன.

இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில், பணி அடிப்படையில் வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண் வழங்கும் முறையில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, ' பழங்குடியினர் வாழும் பகுதிகள், மலைப்பகுதி மற்றும் போக்குவரத்து வசதியில்லாத தொலைதூரப் பகுதி (Remote area) ஆகிய மூன்று பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மட்டுமே கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்' என வரையறுத்துள்ளனர். தவிர, எந்தப் பிரிவினருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது என்பதற்கான பட்டியலையும் வெளியிட்டனர். அதில், 'மாநிலம் முழுவதும் உள்ள 2,223 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 114 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரிபவர்களுக்கு மட்டுமே கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், 'கிராமப்புறங்களில் வசிக்கும் மருத்துவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும்' என்று கூறி, அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.



இதன் விளைவாக, 1,747 டாக்டர்களுக்கு கூடுதல் மதிப்பெண்களை வழங்கியது தமிழக அரசு. இதையடுத்து, கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இந்த விவகாரத்தில், தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக, தனியார் மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், அரசாணையை ரத்துசெய்த நீதிமன்றம், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதனால், 'இந்த ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை நடக்குமா? தர வரிசைப் பட்டியல் வெளியிடுவார்களா?' என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


அரசாணைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த ஜனநாயக மருத்துவர்கள் சங்கத்தின் கார்த்திகேயனிடம் பேசினோம். "தமிழக அரசின் அரசாணையின்படி, அரசு மருத்துவர்களுக்குத் தலா 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் முதல் 1000 இடங்களில் 800 பேர் அரசு மருத்துவர்களாக உள்ளனர். தேசிய அளவில் ஒரு பெண் 48 ஆவது ரேங்க் எடுத்தார். ஆனால், மாநில அரசின் நடவடிக்கையால் தமிழக அளவில் அவர் 186 ஆவது ரேங்கில் வருகிறார். இந்த அடிப்படையில் கலந்தாய்வு நடத்தியதால், மொத்தம் உள்ள 1,066 இடங்களில் 999 இடங்கள் அரசு மருத்துவர்களுக்குச் சென்றுவிட்டது. வெறும் 67 இடங்கள்தான் மற்றவர்களுக்குக் கிடைத்துள்ளன. எனவேதான், நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய விதிமுறைகளின் படியும் அரசு டாக்டர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்ததால் தொடர் மிரட்டல்கள் வருகின்றன. தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களில் பலர், சேவை மனப்பான்மையுடன் உள்ளனர்.

குறைந்த கட்டணத்தில் ஏராளமான க்ளீனிக்குகள் இயங்கிவருகின்றன. தமிழக அரசின் உத்தரவால், மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுவது இல்லை. இதனால், அரசு மருத்துவர்களில் ஒரு பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் எங்கள் முடிவை வரவேற்றுள்ளனர். அரசின் நடைமுறையால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கோடிக்கணக்கில் பணம் கட்டி படிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என்றார் ஆதங்கத்துடன்.

“இந்தப் பிரச்னை உருவாவதற்கு முக்கியக் காரணமே, இந்திய மருத்துவ கவுன்சில்தான். 'அரசு மருத்துவர்களுக்கு அதிக இடங்கள் கொடுக்கக்கூடாது' என்ற உள்நோக்கத்தில் இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறையை நீக்க வேண்டும். இட ஒதுக்கீடு முறையை மாநில அரசிடமே ஒப்படைத்து, பழைய முறைப்படி கலந்தாய்வு நடத்தியிருந்தால், பிரச்னையே இல்லை. அப்படி நடந்தால், ஒரே நாளில் பிரச்னை தீர்ந்துவிடும். இதுகுறித்து, மத்திய அரசிடம் பேச தமிழக அரசு பயப்படுகிறது. நீட் தேர்வு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதுகுறித்து, மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் முன்பு இருந்த நடைமுறையால் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. ஆந்திர அரசைப் போல, அரசு டாக்டர்களுக்கான இடங்களில், அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களே சேரும் வகையில் சட்டம் கொண்டுவருவதே சிறந்ததாக இருக்க முடியும்" என்கிறார், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத்.

அரசு மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் பாலகிருஷ்ணனிடம் பேசினோம். "இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகள் தமிழகத்துக்கு
பொருந்தாது. இங்கு ஏற்கெனவே வேறு ஒரு விதிமுறை பின்பற்றப்பட்டுவருகிறது. மலைப்பகுதி மற்றும் பின் தங்கிய மாநிலங்களுக்குதான் இந்த விதிமுறைகள் பொருந்தும். நாங்கள், நீட் தேர்வை வரவேற்கிறோம். ஆனால், மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளில் மாற்றம்செய்ய வேண்டும். மொத்தம் உள்ள 1,500 மதிப்பெண்களை 100 என்ற அளவில் மாற்ற வேண்டும். அவற்றில், 90 மதிப்பெண்ணுக்குத் தேர்வும் மீதமுள்ள 10 மதிப்பெண்களுக்குப் பணி அடிப்படையிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் என இருவருக்கும் இந்த முறைப்படி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். இதுதான் பொதுவான நீதியாக இருக்க முடியும். இந்திய மருத்துவ கவுன்சிலின் புதிய விதிகளினால்தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், நமது ஒட்டுமொத்த நடைமுறையும் பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, இந்த முறையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்திடம் எடுத்துக்கூறி தீர்வு காண வேண்டும்" என்றார் உறுதியாக.


இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரத்தில் விசாரித்தோம். “முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், வழக்கமாகப் பின்பற்றப்படும் நடைமுறையைத்தான் கடைபிடித்தோம். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம். வரும் ஜூலை 4 -ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வருகிறது. 'அதுவரை எங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும்' என்று கேட்டுள்ளோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம்" என்கின்றனர்.
ஆதாருடன் பான் எண்ணை இணைக்க ஜூலை 1 தான் கடைசித் தேதியா..? 

ராகினி ஆத்ம வெண்டி மு.

பான் எண்ணை ஜூலை 1-ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், மக்களுள் பலர் ஜூலை 1-ம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செல்லாதா என்ற குழப்பமான மனநிலையிலேயே தவித்து வருகின்றனர்.



அடிப்படைச் சேவைகள் பெற ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பான் கார்டு பெறுவதற்கு மற்றும் வருமான வரி தாக்கல்செய்வதற்கு, ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் நடைமுறையை முன்மொழிந்துள்ளது மத்திய அரசு. வரும் ஜூலை 1-ம் தேதி முதல், மேற்குறிப்பிட்ட இரண்டுக்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைப்பதற்காக, புதிய இணையதள வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது வருமானவரித்துறை. அதன்படி, இனி இணையதளத்தின் மூலமே எளிமையான முறையில் ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம். https://incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில், ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணைக் கொடுத்து. பின் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களில் பலர் இதுவரை ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காமலே உள்ளனர். இன்னும் பலர் இன்னும் ஒரு நாள் தான் அவகாசம் உள்ளதெனப் பதிவு செய்ய மொத்தமாகக் குவிய வருமான வரித்துறையின் இணையதளம் தற்போது முடங்கியுள்ளது. ஜூலை 1-ம் தேதிக்குப் பின்னர் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாதது ஆகிவிடும் என மக்களுள் ஒரு கருத்து தற்போது நிலவி வருகிறது.

 மத்திய அரசின் உத்தரவின்படி ஜூலை 1-ம் தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது அவசியமாகிறது. ஆனால், இணைக்க முடியாவிட்டால் பான் கார்டு செல்லாதது ஆகிவிடும் என்ற நிலை கிடையவே கிடையாது. மத்திய அரசின் அறிவிப்பின்படி பின்னதொரு தேதி அறிவிக்கப்பட்டு அதன் பின்னரே பான் கார்டு செல்லாது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். வருமான வரி அரசாணை விதி 139AA-ன் அடிப்படையில் இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைபாடுள்ள கருவைக் கலைக்கலாமா?: முடிவு செய்யும்படி கர்ப்பிணிக்கு கோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
02:20




புதுடில்லி: 'பல்வேறு குறைபாடுகள் உள்ள கருவைக் கலைப்பதால், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்' என, மருத்துவக் குழு கூறியுள்ளதால், இது குறித்து, தன் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி, கர்ப்பிணிக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன், 24 வார கருவுக்கு, பல்வேறு இதயக் கோளாறுகள் இருப்பதால், அதை கலைக்க அனுமதிக்க வேண்டுமென, அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைப்பதற்கு அனுமதி மறுக்கும் சட்டத்தை எதிர்த்தும், அவர் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த, நீதிபதிகள், ஏ.எம்.சப்ரே, எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், மேற்கு வங்க அரசுக்கும் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, ஏழு டாக்டர்கள் அடங்கிய குழு, மருத்துவப் பரிசோதனை செய்யவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.டாக்டர்கள் குழு அளித்துள்ள அறிக்கையில், கருவைக் கலைத்தால், அது, தாயின் உயிருக்கும் ஆபத்தாக அமைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ அறிக்கையின் நகலை, வழக்கு தொடர்ந்துள்ள, கர்ப்பிணிக்கு அளிக்க உத்தரவிட்டுள்ள கோர்ட், கருவை கலைப்பது குறித்த தன் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி கூறியுள்ளது. வழக்கின் விசாரணை, ஜூலை, 3க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செய்யது பீடி நிறுவனங்களில் ரூ.100 கோடிக்கு வரி ஏய்ப்பு

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
00:11

செய்யது பீடி குழும நிறுவனங்களில் நேற்று, இரண்டாவது நாளாக சோதனை நடந்தது. ஐந்து மாநிலங்களில் நடந்த சோதனையில், 100 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டையில், செய்யது பீடி அலுவலகத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. செய்யது பீடி குழுமத்தில், செய்யது ஷரியத் பைனான்ஸ், செய்யது டிரேடிங் கம்பெனி போன்ற நிறுவனங்களும் அடக்கம். அந்த நிறுவனங்களில், நேற்று முன்தினம், வருமான வரித்துறையினர் திடீர் சோதனையை துவங்கினர். தமிழகத்தில், சென்னை, திருநெல்வேலி, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் என, மொத்தம், 63 இடங்களில் நடந்தது. இதில், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்தது தெரிய வந்துள்ளது.

இது குறித்து, தமிழக வருமான வரி புலனாய்வு துறை அதிகாரிகள் கூறியதாவது: செய்யது பீடி குழுமத்தில், சோதனை இரண்டாவது நாளாக தொடர்ந்தது. முதல் நாளில், நான்கு கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டாவது நாள் நடந்த சோதனையிலும், வரி ஏய்ப்பு தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அதை மதிப்பிடும் பணி நடந்து வருகிறது. 100 கோடி ரூபாய்க்கு மேல், வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம். வரி ஏய்ப்பு தொடர்பான முழு விபரங்கள், ஓரிரு நாட்களில் தெரியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -
திருமண பதிவு: புதிய சட்ட முன்வடிவு அறிமுகம்

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
01:22




சென்னை: தமிழ்நாடு திருமணங்களை பதிவு செய்தல் சட்டத்தில், திருத்தம் கொண்டு வருவதற்காக, புதிய சட்ட முன்வடிவு, நேற்று சட்டசபையில், அறிமுகம் செய்யப்பட்டது.

சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம், சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார். இதன் விபரம்: இப்புதிய சட்டம், '2017 தமிழ்நாடு திருமணங்களை பதிவு செய்தல் திருத்த சட்டம்' என அழைக்கப்படும். தமிழகத்தில், அனைத்து திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, 2009ல், தமிழ்நாடு திருமணங்களை பதிவு செய்தல் சட்டம் இயற்றப்பட்டது.

இதன்படி, திருமணம் நடந்த தேதியில் இருந்து, 90 நாட்களுக்குள், திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். இல்லையேல், கூடுதலாக, 60 நாட்களுக்குள், அதற்கான கட்டணத்துடன், பதிவு செய்ய வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றம், 2015 பிப்., 9ல் அளித்த தீர்ப்பில், கூடுதலாக கட்டணம் செலுத்தி, 150 நாட்களுக்கும் மேலாக, திருமணங்களை பதிவு செய்யும் வழிமுறையை தயார் செய்ய அறிவுறுத்தியது. இது தொடர்பாக, திருத்தம் கொண்டு வருவதற்காக, புதிய சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருமணம் நடத்தும் நபர், மத குரு என்று அழைக்கப்படுகிறார். இந்த சொல், அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சொல் என்பதற்கான திருத்தமும், இந்த சட்ட திருத்தத்தில் இடம் பெற்றுள்ளது.
வீடுகளில் இலவச மின்சாரம் : ஏளனம் செய்யும் பொறியாளர்கள்

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
00:24

மின் வாரிய அலுவலகங்களுக்கு புகார் தெரிவிக்க செல்லும் மக்களை, இலவச மின்சாரத்தை கூறி, உதவி பொறியாளர்கள் ஏளனம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில், 100 யூனிட் வரை இலவசம்; 500 யூனிட் கீழ் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, குறைந்த விலையில் மின் கட்டணம் வசூலிக்கிறது. அதற்காக, மின் வாரியத்துக்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு, மானியமாக வழங்குகிறது. தற்போது, வீடுகளில், 'ஸ்டேடிக்' என்ற நவீன மீட்டர் பொருத்தப்படுகிறது. அதில், மின் பயன்பாடு அளவு துல்லியமாக பதிவாவதால், பலருக்கு, அதிக மின் கட்டணம் வருகிறது.
புதிய மின் இணைப்பு கோரும்போது குறிப்பிட்டிருந்த அளவை விட, தற்போது, அதிக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில், கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்படுகிறது. அந்த விபரத்தை, மின் கணக்கீட்டு அட்டையில், ஊழியர்கள் தனித்தனியே எழுதுவதில்லை. மொத்தமாக எழுதுவதால், வழக்கத்தை விட, அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக கருதி, பலர், பிரிவு அலுவலகங்களுக்கு புகார் தெரிவிக்க செல்கின்றனர். அவர்களை, உதவி பொறியாளர்கள், இலவச மின்சாரத்தை கூறி, ஏளனம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, மின் நுகர்வோர் ஒருவர் கூறியதாவது: கூடுதல் மின் கட்டணம் தொடர்பாக, பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவிக்க சென்றேன். அங்குள்ள பொறியாளர், '100 யூனிட் இலவச மின்சாரம் வரும் போது, யாரும் வருவதில்லை; இப்ப மட்டும் வந்துடுறீங்க... உங்களுக்கு எல்லாம் இலவச மின்சாரம் ஒரு கேடு...' என, தரக்குறைவாக பேசுகிறார். இதேபோல், அனைத்து பகுதிகளிலும் நடக்கிறது. இதனால், மின் ஊழியர்கள் மீது தவறு இருந்தாலும், புகார் தெரிவிக்க அலுவலகத்துக்கு செல்ல தயக்கமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மரியாதை கொடுக்காமல் ஏளனமாக நடக்கும் ஊழியர்கள், பொறியாளர்கள் மீது, எழுத்து பூர்வமாக புகார் அளித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

- நமது நிருபர் -
மத்திய ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு 3 ம்தேதி ஆன்லைன் பதிவ துவக்கம்

பதிவு செய்த நாள் 29 ஜூன்
2017
23:40

மருத்துவ சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு, ஜூலை, 3 முதல், ஆன் லைனில் விண்ணப்ப பதிவு துவங்குகிறது. 'நீட்' தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அகில இந்திய அளவில் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அவர்களில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தனியாக தரவரிசை பட்டியல் வெளியாகும். அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங்குக்கு, ஜூலை, 3ல், www.mcc.nic.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் பதிவு துவங்குகிறது. ஜூலை 11 வரை, பதிவுக்கு அவகாசம் தரப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்களுக்கான விருப்ப பாடப்பிரிவு மற்றும் கல்லுாரிகளின் நிலை குறித்து, ஜூலை, 12ல் பதிவு செய்யலாம்.
ஜூலை, 13ல் முதற்கட்ட கவுன்சிலிங்கில், இட ஒதுக்கீடு துவங்கும். இது, மத்திய அரசின், 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் நடக்கும். இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆக.,1ல் துவங்கி, 16ல் முடியும். நிரம்பாத இடங்கள், ஆக., 16ல், மாநில ஒதுக்கீடுக்கு வழங்கப்படும்.

- நமது நிருபர் -
பெட்ரோல்,டீசல் விலை இன்று(ஜூன்-30) எவ்வளவு?

பதிவு செய்த நாள்
ஜூன் 29,2017 20:55




புதுடில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.74, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.30காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூன்- 30) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 16காசுகள் குறைந்து ரூ.65.74 காசுகள், டீசல் விலை நேற்றைய விலையை விட 8 காசுகள் குறைந்து ரூ.56.30காசுகள் என விலை நிர்ணயித்துள்ளன. இந்த விலை இன்று(ஜூன் -30) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
மருத்துவ படிப்பு விண்ணப்பம் தட்டுப்பாடு : கோவையில் மாணவர்கள், பெற்றோர் மறியல்

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
01:36

கோவை: கோவையில், மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பம் கிடைக்காததால், மாணவர்களும், பெற்றோரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும், 22 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், இளநிலை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள், ஜூன், 27 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, தனியார் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளுக்கான விண்ணப்பங்களும், அரசு மருத்துவக் கல்லுாரிகளிலேயே வழங்கப்படுகின்றன.தினமும், 1,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், விண்ணப்பம் பெற வருகின்றனர்; அனைவருக்கும் விண்ணப்பங்கள் கிடைப்பதில்லை. குறிப்பாக, சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளுக்கு, 50 அல்லது 100 விண்ணப்பங்களுக்கு மேல் கொடுப்பதில்லை. மூன்று நாட்களாக, விண்ணப்பங்கள் முறையாக வழங்கப்படாமல், மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.நேற்று, கோவை மருத்துவக் கல்லுாரியில் விண்ணப்பம் பெற வந்தவர்களில், பாதி பேருக்கு கிடைக்கவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த மாணவர்களும், பெற்றோரும், அவினாசி ரோட்டில், சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில், அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

'விண்ணப்பம் கிடைக்காதவர்கள், ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து அனுப்பலாம்' என, கல்லுாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அனைவரும் கலைந்து சென்றனர்.

ஆன்லைனில் பதிவிறக்கம்

மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறுகையில், ''விண்ணப்பங்கள் அச்சடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அச்சாகும் விண்ணப்பங்களை, உடனுக்குடன் வழங்கி வருகிறோம். ''விண்ணப்பங்கள் கிடைக்காதவர்கள், www.tnhealth.org மற்றும் www.tnhealthselection.org என்ற இணைய தளங்களில், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி, அத்துடன் விண்ணப்ப கட்டணத்துக்கான வரைவோலை இணைத்து அனுப்பினால் ஏற்றுக் கொள்ளப்படும்,'' என்றார்.

சேலம்

சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லுாரியில், நேற்று விண்ணப்பங்களை வாங்க, 1,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர் குவிந்தனர். 500 டோக்கன்கள் வழங்க தயாராக இருந்தனர்.
வரிசைப்படி வழங்காமல், வேண்டப்பட்டவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதால், நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள் பொறுமை இழந்து, கல்லுாரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம்
நடத்தினர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பேச்சு நடத்தியதை அடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.

மாணவர் ஆசிக் கூறுகையில், ''சிலர் டோக்கன் இல்லாமல், விண்ணப்பத்தை வாங்கி சென்றனர். கடைகளில் புரோக்கர்கள், ஒரு விண்ணப்பத்தை, 900 ரூபாய்க்கு விற்று வருகின்றனர்,'' என்றார்.

கல்லுாரி துணை முதல்வர் வித்யாராணி கூறும் போது, ''அரசு தரப்பில், 500 விண்ணப்பங்கள் தான் அனுப்பினர். மாணவர்கள் மற்றும் பெற்றோர் கட்டாயத்தால், டோக்கன் கொடுக்கும் முடிவுக்கு வந்தோம்,'' என்றார்.
பிஎஸ்என்எல்.,ன் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டம்

பதிவு செய்த நாள் 29 ஜூன்
2017
13:09

புதுடில்லி : பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிக்சர் அல்லது 666 என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. புதிய திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு அனிலிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினமும் 2ஜிபி டேட்டா பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல். அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் அனைத்து நெட்வொர்க்களுக்கும் 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நிறைவுற்றதும் வாடிக்கையாளர்கள் தில் கோல் கே போல்-349, டிரிப்பிள் ஏஸ்-333 அல்லது சௌக்கா-444 திட்டங்களை தேர்வு செய்ய முடியும்.
சமீபத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.786 மற்றும் ரூ.599 விலையில் இரண்டு காம்போ திட்டங்களை அறிவித்தது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே சௌக்கா 444 திட்டத்தில் அன்லிமிட்டெட் டேட்டா 90 நாட்களுக்கு, தினமும் 4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் வழங்கும் வரவேற்புக்கு ஏற்ப புதிய திட்டங்களை பி.எஸ்.என்.எல். தொடர்ந்து அறிவித்து வருகிறது. ஜியோவுக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டம் நாட்டில் மிகவும் குறைந்த விலையில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று வோடபோன், ஐடியா, மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றன.
505 டாக்டர்களுக்கு நியமன ஆணை

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
00:24

சென்னை: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., தேர்வு செய்த, 505 டாக்டர்களில், 24 பேருக்கு முதல்வர் பழனிசாமி பணி ஆணை வழங்கினார். தமிழகத்தில், 340 உதவி டாக்டர்கள், 165 சிறப்பு உதவி டாக்டர்கள் என, மொத்தம், 505 டாக்டர்களை, எம்.ஆர்.பி., தேர்வு செய்தது. அவர்களுக்கு, சுகாதாரத்துறையில் பணி நியமன ஆணை வழங்கும் விழா, சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று நடந்தது. முதல்வர் பழனிசாமி, 24 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.மற்ற டாக்டர்களுக்கு, துறையின் உயரதிகாரிகள் வழங்கினர்.

சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''எம்.ஆர்.பி., 2012ல் துவங்கப்பட்டது. இதுவரை, 8,692 டாக்டர்கள், 9,190 நர்ஸ்கள் உட்பட, 20 ஆயிரத்து, 862 பேரை தேர்வு செய்துள்ளது,'' என்றார்.
விடை திருத்தத்தில் குளறுபடி : 3,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
00:05


விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி செய்த, 3,000 ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு தேர்வுத்துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிளஸ் 2மற்றும், 10ம் வகுப்புக்கு, அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில், 20 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இதில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்தே, அவர்களின் உயர்கல்வி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த முறை பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வுகளில், பல மாணவர்களுக்கு, மதிப்பெண்ணில் குளறுபடி ஏற்பட்டது. அவர்களது மதிப்பெண் பிழைகளை சரி செய்ய, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.

இதில், பிளஸ் 2வுக்கு, 5,000 பேரும், 10ம் வகுப்பில், 2,000 பேரும், பிழைகளை சரி செய்ய விண்ணப்பித்தனர். அவர்களின் விடைத்தாள்களில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு சென்னையில் நடந்தது. இதன் முடிவில், பிளஸ் 2வில், 2,070 பேருக்கும், 10ம் வகுப்பில், 821 பேருக்கும், பிழைகள் இருந்தது கண்டறியப்பட்டது. பின், அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, திருத்திய விடைத்தாள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், விடை திருத்தத்தில் குளறுபடி செய்த விடை திருத்தும் ஆசிரியர்கள், மேற்பார்வையிடுவோர், மதிப்பெண் கண்காணிப்பாளர் என, 3,000பேரின் பட்டியல் தயாராகி உள்ளது. இவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான பள்ளிக்கல்வி செயலக உத்தரவின் பேரில், ஆசிரியர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் : விபரங்கள் நிரப்ப முடியாமல் திணறல்

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
00:01

மதுரை: மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களில் கேட்கப்பட்ட விபரங்களை நிரப்ப, போதிய இடம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

'நீட்' தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. அரசு, சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்களுக்கு விண்ணப்பம் வினியோகம் நடக்கிறது. மதுரை உட்பட 22 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இந்த விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. சில பகுதிகளில் வழங்கப்பட்ட விண்ணப்பங்களில், ஓ.எம்.ஆர்., படிவம் மற்றும் எவ்வாறு நிரப்ப வேண்டும் என்ற விபரங்கள் கொண்ட புத்தகம் கடந்தாண்டுக்கு உரியவை.வயது தகுதியாக, 'டிச.,31, 2017ன்படி 17 வயது பூர்த்தியானவர் இதற்கு விண்ணப்பிக்கலாம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஓ.எம்.ஆர்., ஷீட்டில் மாணவர் பிறந்த தேதியை குறிப்பிட கட்டங்களை கறுப்பு நிறத்தில் நிரப்பும்போதும் ஆண்டு குறிப்பிடும் இடத்தில், 2000 மற்றும் அதற்கு மேல் பிறந்தவர் ஆண்டை குறிப்பிட முடியவில்லை. 1999 வரை பிறந்தவர் மட்டுமே குறிப்பிடும் வகையில் கட்டங்கள் இடம் பெற்றுள்ளன. '2', '0' ஆகிய எண்களை குறிப்பிட வழி இல்லை.அதேபோல், விண்ணப்பத்தில் 10 இலக்கம் கொண்ட பதிவு எண் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், படிவத்தில் 'ரெஜிஸ்டர்/ரோல் நம்பர்' என குறிப்பிட்டு எட்டு இலக்கம் எழுதுவதற்கு மட்டும்
இடம் உள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:இந்த ஆண்டு மருத்துவ படிப்பு, மாணவர்களுக்கு கடும் சோதனையாக மாறிவிட்டது. 'நீட்' தேர்வு குறித்த தமிழக அரசு நிலைப்பாட்டால் கடைசி வரை குழப்பம் தான் ஏற்பட்டது. கணினி நடைமுறை மூலம் தான் விண்ணப்பம் ஏற்கப்படும்.
அப்போது ஓ.எம்.ஆர்., படிவத்தில் சிறு பிழை இருந்தாலும் கூட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இப்பிரச்னை குறித்து சுகாதாரத்துறை செயலர் கவனிக்க வேண்டும். சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீடுக்கான விண்ணப்பங்களும், தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.
பல்லாவரம் நகராட்சியில் தீவிர வசூல் வேட்டை

பதிவு செய்த நாள் 29 ஜூன்
2017
23:56

குரோம்பேட்டை;பல்லாவரம் நகராட்சியில், தீவிர வசூல் வேட்டை நடப்பதை ஒட்டி, பொதுமக்கள் வரியை செலுத்தி பயனடையுமாறு, நகராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.பல்லாவரம் நகராட்சியில், நாளை முதல், 15ம் தேதி வரை, தீவிர வசூல் முகாம் நடக்க உள்ளது. இந்த தினங்களில், பல்லாவரம் நகராட்சி அலுவலக வசூல் மையம், நேரு நகர் வசூல் மையம், ராதா நகர் மேல்நிலை தொட்டி வளாகம், கண்ணபிரான் கோவில் தெரு, கீழ்க்கட்டளை பேருந்து நிலைய வணிக வளாகம் ஆகிய கணினி மையங்கள் மற்றும் tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக வரி செலுத்துமாறு, பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இந்த மையங்களில், சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குத்தகை நிலுவை மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றை செலுத்தி பயனடையலாம்.
சூலமங்கலம் சகோதரி மரணம்

பதிவு செய்த நாள் 29 ஜூன்
2017
23:37




சென்னை: பழம் பெரும் பாடகி, சூலமங்கலம் ஜெயலட்சுமி, உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடல், மருத்துவக் கல்லுாரிக்கு தானம் தரப்பட்டுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த, சூலமங்கலம் சகோதரிகள் என அழைக்கப்படுபவர்கள் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி. பக்தி பாடல்கள் மூலம் புகழ் பெற்ற இவர்கள் பாடிய, கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், உலகம் முழுவதும் புகழை பெற்றுத் தந்தன. இவர்களில் மூத்தவரான ஜெயலட்சுமி, 85, உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை, சென்னையில் காலமானார்.அவரது இளைய சகோதரி ராஜலட்சுமி, 1992ல் காலமாகி விட்டார்.
ஜி.எஸ்.டி., வரி நாளை முதல் அமலாகிறது... புதிய சகாப்தம்! வரவேற்க தொழில் துறையினர் ஆயத்தம்

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
01:07




திருப்பூர் : எளிமையான வரி நடைமுறையுடன் கூடிய, ஜி.எஸ்.டி., நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதை வரவேற்க, திருப்பூர் தொழில் துறையினர் ஆயத்தமாக உள்ளனர்.

மன்னர் ஆட்சி காலத்தில் துவங்கி, இன்றைய மக்களாட்சி வரை நீடிக்கிறது, வரி விதிப்பு நடைமுறை. மக்களின் நல திட்டங்கள் வகுக்கவும், அரசு இயந்திரத்தை திறம்பட இயக்கவும், வரி வருவாய் மிக அவசியமானதாக உள்ளது. நமது நாடு அன்னியர் வசம் இருந்த போது, ஒரு பொருளை உற்பத்தி செய்யும் இடத்திலேயே வரி விதிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது; இதுவே, கலால் வரி.சுதந்திரத்துக்கு பின்னும், அரசுக்கு வருவாய் தேவைப்பட்டதால், கலால் வரி தொடர்ந்தது. ஒரு பொருள் மீது கலால் வரி விதிக்கப்பட்டால், அந்த துறையினர் அஞ்சி நடுங்குவர்; அந்தளவு, கடுமையானதாகவே கலால் வரி பார்க்கப்படுகிறது. இதுதவிர, மாநில அரசுகள் விற்பனை வரி, நுழைவு வரி என, எண்ணற்ற வரியினங்களை விதிக்கின்றன.பொருளாதார வளர்ச்சி, வர்த்தக வளர்ச்சியை கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில், பல ஆண்டுகளுக்கு முன்னரே, நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை கொண்டு வந்துவிட்டன; 140 நாடுகள், ஒரே நாடு; ஒரே வரி என்ற கொள்கையை கடைபிடித்து வருகின்றன. நீண்ட போராட்டத்துக்குப் பின், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நமது நாட்டில், ஒரே நாடு; ஒரே வரி; ஒரே சந்தை என்ற கோட்பாட்டுடன், வரியினங்களையெல்லாம் ஒருங்கிணைத்து, சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.,) கொண்டு வந்துள்ளது.

மத்திய, மாநில வரியினங்களெல்லாம், இதனுள் அடங்கிவிடும். ஜி.எஸ்.டி., என அழைக்கப்பட்டாலும்கூட, சி.ஜி.எஸ்.டி.,- எஸ்.ஜி.எஸ்.டி., வெளிமாநில வர்த்தகம், இறக்குமதியின் போது ஐ.ஜி.எஸ்.டி., என மூன்று முகங்களை, இது கொண்டுள்ளது. ஜி.எஸ்.டி., இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதால், கலால், வணிக வரி போன்ற பழைய வரி நடைமுறைகள், இன்றிரவோடு காலாவதியாகின்றன; நள்ளிரவு, 12:00 மணி முதல், ஜி.எஸ்.டி., வரி நடைமுறைக்கு வந்துவிடுகிறது.
சிகப்பு கம்பள வரவேற்புமத்திய அரசின் வரி சீர்திருத்த நடவடிக்கையை, திருப்பூர், கோவை பகுதி தொழில்துறையினர், வர்த்தகர்கள், உற்சாக வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட, புரியாத சட்ட நுணுக்கங்கள், சிக்கலான நடைமுறைகளை கொண்ட கலால் வரியின் ஆயுள் இன்றோடு நிறைவடைகிறது; இதுவே, தொழில் துறையினரின் இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு முக்கியமான காரணமாகும்.வெளிப்படை தன்மை உள்ளதால், மிக எளிதாக ஜி.எஸ்.டி., விதிமுறைகள், நடைமுறைகளை அறிந்து, பின்பற்றமுடியும். வரிக்கு வரி என்கிற நிலை ஒழிவதால், வரிச்சுமை குறைந்துவிடும். செலுத்திய வரியில், உள்ளீட்டு வரி வரவு கிடைக்கும் என்பது, வர்த்தகர்களுக்கு இனிமை சேர்க்கின்றன. வரி குறைவதால், பொருட்கள் விலை குறைந்து, நுகர்வோரும் பயனடைவர்.ஜி.எஸ்.டி., வருகையால், புதிய ரசீது புத்தகம் தயாரிப்பு, கையிருப்பு பொருட்கள் விவர பட்டியல் தயாரிப்பு பணிகளில் தொழில் துறையினர் மும்முரம் காட்டி வருகின்றனர். ஆயத்த ஆடை துறைக்கான வரி விதிப்பில், சில சிக்கல்கள் இருந்தாலும், தங்களது கோரிக்கைகளை பரிசீலித்து, அரசு நிச்சயம் நிறைவேற்றி தரும் என்ற நம்பிக்கையும், தொழில்துறையினருக்கு பிறந்துள்ளது.

ஜி.எஸ்.டி., ஒரு நிவாரணிஆடிட்டர் தனஞ்செயன் கூறியதாவது:பழைய வரி முறைப்படி, உற்பத்திக்கு கலால் வரி, இறக்குமதிக்கு சுங்கம்; சேவை வரி, விற்பனை வரி, நுழைவு, பொழுதுபோக்கு வரி, அனைத்து வரிக்கும் பொருந்தும் சர்சார்ஜ் வரி, செஸ் வரிகள் உள்ளன. இவற்றில், இறக்குமதிக்கான சுங்க வரி தவிர, அனைத்து வரிகளும் ஜி.எஸ்.டி.,க்குள் வந்து விடுகின்றன. தற்போதைய கலால் வரி சட்டம், மிகவும் சிக்கலானது.ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.,யில், கணினி மயமாக்கப்பட்ட வரைமுறை மூலம், மிக எளிதாக வரி நடைமுறைகளை கடைபிடிக்க முடியும். அதிகாரிகள் தலையீடு குறைந்து, அனைவரும் தாமாக வரி சட்டத்தின்படி, தொழில் செய்வது சுலபமாகிவிடும். அவர்களிடம் இருந்து சிரமமுமின்றி, அரசு வரி வசூலிக்கும். கடந்த கால வரிகளால் உருவான வலிக்கு, நிவாரணியாக ஜி.எஸ்.டி., வந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
"செல்பி'க்கு ஆர்வம்ஜி.எஸ்.டி.,க்கு, தொழில் துறையினர் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். முதல்முறை தாங்கள் வழங்கும் பொருட்கள், வாங்கும் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., ரசீதுடன், செல்பி எடுத்து, பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக தளங்களில் பதிவுசெய்ய திட்டமிட்டுள்ளனர். அதேபோல், கலால் வரியும் தனது பயணத்தை முடிக்கிறது. எனவே, வர்த்தகர்கள், தொழில் துறையினர், தாங்கள் வழங்கும் கலால் வரி அடங்கிய கடைசி ரசீதுகளுடனும் கூட, செல்பி எடுத்துக் கொள்ளலாம்.
தலையங்கம்

பூங்கொத்துகளுக்கு பதிலாக ‘புத்தகங்கள்’





பிரதமர் நரேந்திரமோடி மாதம் ஒருமுறை ‘மனதின் குரல்’ என்ற தலைப்பில், அகில இந்திய வானொலியில் பொதுமக்களிடையே உரையாற்றி வருகிறார்.

ஜூன் 30, 03:00 AM \

பிரதமர் நரேந்திரமோடி மாதம் ஒருமுறை ‘மனதின் குரல்’ என்ற தலைப்பில், அகில இந்திய வானொலியில் பொதுமக்களிடையே உரையாற்றி வருகிறார். ஒவ்வொரு மாதமும் அவர் ஆற்றும் உரை, நாட்டு மக்களின் மனதை தொடும்வகையில் அமைந்துள்ளது. அந்தவகையில், இந்த மாதம் அவருடைய உரையில், பூங்கொத்துகளுக்கு பதிலாக, ‘புத்தகங்கள்’ கொடுக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் பேசினார். நான் குஜராத்தில் இருந்த வேளையில், ‘‘நாம் இனி பூங்கொத்துகளை அளிக்கக்கூடாது, புத்தகங்களே அளிக்கவேண்டும்’’ என்ற வழிமுறையை உருவாக்கியிருந்தோம். ஆனால், அங்கிருந்து நான் வந்தபிறகு, இந்தப் பழக்கம் விடுபட்டுப்போயிருக்கிறது. ஆனால், கேரளா சென்றபோது, மீண்டும் எனக்கு ஒரு விழிப்புணர்வு உண்டானது. நான் இப்பொழுது அரசில் பணிபுரிவோரிடம், இந்தப் பழக்கத்தை தொடங்குங்கள் என்று கூறியிருக்கிறேன். நாமும் மெல்ல மெல்ல இதை ஒரு இயல்பாகவே ஆக்கப்பழகலாம். பூங்கொத்து நீண்டநேரம் நீடிப்பதில்லை. ஒருமுறை கையில் பெற்றுக்கொண்டபின், அதை நாம் தள்ளிவைத்து விடுகிறோம். ஆனால், நாம் புத்தகங்களை அளிக்கும்போது, ஒருவகையில் அது வீட்டின் ஒரு அங்கமாகவே ஆகிவிடுகிறது, குடும்பத்தின் உறுப்பினராக மாறிவிடுகிறது என்று பேசினார்.

இதுபோல, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு பிறந்தநாளின்போது, யாரும் தனக்கு பூங்கொத்தோ, மலர்மாலையோ, சால்வையோ தரவேண்டாம். அதற்கு பதில் புத்தகங்கள் தாருங்கள் என்று கூறினார். இதன்படி, கிடைத்த ஆயிரக்கணக்கான புத்தகங்களை நூலகங்களுக்கு பரிசாக வழங்கினார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 10 ஆண்டுகளாக தனக்கு யாரும் மாலை போடக்கூடாது, அதற்கு பதிலாக, புத்தகங்கள் கொடுக்கலாம் என்று கண்டிப்பாக கூறிவருகிறார். அந்த கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசும், தனது கூட்டங்களில் யாரும் மாலை அணிவித்தால் அதை கழுத்தில் அணிந்துகொள்வதில்லை. மாலைகள், பூங்கொத்துகள், சால்வைகளுக்கு பதிலாக, ‘புத்தகங்கள் தாருங்கள்’ என்று கேட்டு, அவ்வாறு கிடைக்கும் புத்தகங்களை ஏழை–எளிய மாணவர்களுக்கு, பெரியவர்களுக்கு பரிசாக வழங்குகிறார். மேலும் சில தலைவர்களும் பூங்கொத்துகள், மாலைகள், சால்வைகளுக்கு பதிலாக புத்தகங்கள் வாங்கும் நல்ல பழக்கங்களை கடைபிடித்து வருகிறார்கள். மலர் மாலைகளோ, பூங்கொத்துகளோ, ஏன் சால்வையோ கொடுக்கும் ஒருநொடியில் அதன் பயன்பாடு முடிந்துவிடுகிறது. ஆனால், புத்தகங்கள் வழங்கினால் நாம் யாருக்கு வழங்குகிறோமோ அவர்களுக்கும், அவர்களால் கொடுக்கப்படுபவர்களுக்கும் அறிவை விசாலமாக்குகிறது.

நல்ல புத்தகம் அறிவுரை வழங்கும் ஆசானாகவும், அன்பு காட்டும் தாயாகவும், அரவணைக்கும் தந்தையாகவும், தோள் கொடுக்கும் தோழனாகவும் நெருக்கமாக இருக்கிறது. பொழுதுகளை இனிப்பாக்குகிறது. நாட்களை நந்தவனமாக்குகிறது. எண்ணற்ற அறிஞர்களின் அனுபவங்களை கடற்பஞ்சாய் உறிஞ்சி கடைத்தேற புத்தக வாசிப்பு உதவுகிறது. தனிமையை போக்குகிறது. வாசிப்பதும் ஒருவித தவம். போர்க்களத்துக்கு அலெக்சாண்டர், ஹோமரின் நூல்களையே எடுத்து சென்றார். நம்மிடமிருக்கும் புத்தகங்கள் அறிவுலகத்துக்கான திறவுகோல். அவை நமக்கு பின்னும் எண்ணற்ற இதயங்களில் ஒளியேற்றிவைக்கும். எனவே, இந்த தலைவர்களின் வழியை பின்பற்றி, எல்லாருமே ஒருசில நிமிடங்களில் பயனற்றுப்போய்விடும் மாலை, பூங்கொத்துகளுக்கு பதிலாக, புத்தகங்களை பரிசாக வழங்கும் முறையை பின்பற்றலாம். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு, செய்தித்துறை செயலாளராக இருந்தபோது, 2006–ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட ஒரு உத்தரவில், ‘அரசு விழாக்களில் பூங்கொத்தோ, மாலைகளோ, சால்வையோ தராமல், புத்தகங்களை பரிசளிக்கவேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு, வெறும் ஏட்டளவில் இருக்கிறதே தவிர, இன்றைய காலக்கட்டங்களில் நடைமுறையில் இல்லை. அமைச்சர்களும், அதிகாரிகளும் இந்த உத்தரவுக்கேற்ப, தாங்கள் கலந்துகொள்ளும் விழாக்களில் இனி புத்தகங்கள் மட்டுமே தரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.














தேசிய செய்திகள்

பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய மந்திரி சமூக வலைதளங்களில் கண்டனம் வலுக்கிறது





பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய வேளாண் மந்திரி ராதாமோகன் சிங் செய்த காரியம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜூன் 30, 2017, 04:30 AM

பாட்னா,

மத்தியில் ஆளக்கூடிய பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாடு முழுவதிலும் சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்கும் வகையில் ‘தூய்மை இந்தியா திட்டம்’ என்கிற திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்காக கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய வேளாண் மந்திரி ராதாமோகன் சிங் செய்த காரியம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த மத்திய மந்திரி ராதாமோகன் சிங், மோடிஹாரி என்ற இடத்துக்கு அருகே காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென காரை நிறுத்திவிட்டு, காரில் இருந்து இறங்கி சாலை ஓரத்தில் சிறுநீர் கழித்தார். அவருடைய பாதுகாவலர்கள் அவரது பாதுகாப்புக்காக அருகில் நின்றுகொண்டிருந்தனர்.

இதை சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் உலாவ விட்டனர். இந்த வீடியோ வேகமாக பரவியது.

இதையடுத்து, சமூக வலைதளங்களில் பலர் மத்திய மந்திரிக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அவரது இந்த ஒழுங்கீன நடத்தை தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், இது குறித்து அவரிடம் பிரதமர் விளக்கம் கோர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
மாநில செய்திகள் 
 
என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிப்போகிறது? ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு

என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிப்போகிறது? ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு
 
என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிப்போகிறது. ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
 
சென்னை,

தமிழ்நாட்டில் 584 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சேருவதற்கு 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது.

இவர்களுக்கு ரேண்டம் எண்ணும், ரேங்க் பட்டியலும் வெளியிடப்பட்டன. கலந்தாய்வு கடந்த 27-ந் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் தொடங்கவில்லை.

சில மாணவர்கள் மருத்துவம், என்ஜினீயரிங் என இரண்டு படிப்புகளுக்கும் விண்ணப்பித்து உள்ளனர். மருத்துவத்தில் இடம் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் என்ஜினீயரிங் சேருவார்கள். எனவே எப்போதுமே மருத்துவ கலந்தாய்வு தொடங்கிய பின்னர்தான் என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 17-ந் தேதி தொடங்குகிறது.

கடந்த வருடம் மருத்துவ கலந்தாய்வுக்கும், என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கும் இடையே ஒரு வாரம் இடைவெளி இருந்தது.

எனவே இந்த ஆண்டு என்ஜினீயரிங் கலந்தாய்வு, ஜூலை மாதம் 3-வது வாரம் இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு விரைவில் வருகிறது. என்ஜினீயரிங் கலந்தாய்வு எப்படியும் 28 நாட்களாவது நடக்கும். எனவே என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் தாமதமாக தொடங்கினால் அதற்கான அனுமதியை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலில்(ஏ.ஐ.சி.டி.இ.) பெறப்படும்.

இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Thursday, June 29, 2017

மருத்துவ படிப்புக்கு 2-வது நாளில் 11 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகம்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு 2017-2018-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும்,கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியிலும் நேற்று முதல் வினியோகம் செய்யப்பட்டன.
2-வது நாளாக நேற்றும் விண்ணப்ப வினியோகம் நடந்தது. கடந்த 2 ஆண்டுகளாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதை பதிவிறக்கம் செய்து அனுப்பும் வழக்கம் நடைமுறையில் இருந்தது.இந்த ஆண்டு அந்த நடைமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுஇருந்தது.

இதனால் நேரடியாக விண்ணப்பங்களை வந்து வாங்குவதற்காக மாணவர்கள் கூட்டம் அலைமோதியது. இதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஆன்-லைன் விண்ணப்ப முறை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.மாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் www.tnh-e-a-lth.org என்ற இணையதளத்துக்கு சென்று விண்ணப்பத்தைபூர்த்தி செய்து, அதன்பின்னர் அதை பதிவிறக்கம் செய்துஅனுப்பலாம். மருத்துவ படிப்புக்கு முதல் நாளில் 8 ஆயிரத்து 379 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று அரசு கல்லூரி இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 9 ஆயிரத்து 597 விண்ணப்பங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆயிரத்து 405 விண்ணப்பங்களும் என மொத்தம் 11 ஆயிரத்து 2 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டதாக மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வராஜ் தெரிவித்தார்.வருகிற 7-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 8-ந் தேதி மாலை 5 மணிக்குள் ‘செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவ கல்வி இயக்ககம், 162, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010’ என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
மருத்துவ சேர்க்கையில் 85 சதவீத உள்ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு.
நீட் அடிப்படையிலான மருத்துவ சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் உள் ஒதுக்கீட்டை வழங்கும் தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர் தொடுத்த வழக்குக்கு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவ சேர்க்கை நடைபெற தமிழகத்தில் இந்த ஆண்டு மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதற்கு பல்வேறு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஒரு வழியாக தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் வெளியாகின.

நீட் தேர்வு முடிவுகளின் தர வரிசை பட்டியலில் ஒரு தமிழக மாணவர் கூட இடம்பெறவில்லை. இந்நிலையில் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், சிபிஎஸ்இ திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீதம் வழங்கப்படும் என்றும் கடந்த 22-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

கடந்த 27-ஆம் தேதி முதல் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் தொடங்கின. விண்ணப்பங்களை பெற கடைசி தேதி ஜூலை 7-ஆம் தேதி யாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவ இயக்குநரகத்துக்கு ஜூலை 8-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்நிலையில் தமிழக அரசின் உள்ஒதுக்கீட்டு அரசாணையை எதிர்த்து தஞ்சையை சேர்ந்த தார்ணீஷ் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதில் தமிழக அரசு பிறப்பித்த உள்ஒதுக்கீட்டால் என்னை போன்று நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சிபிஎஸ்இ பிரிவு மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படுவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில இருந்த எனக்கு இந்த அரசாணையால் இடம் கிடைக்காமல் போய்விடும்.

மேலும் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு செய்ய மட்டும் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. மாநில பாடத்திட்டம், சிபிஎஸ்இ பாட திட்டம் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு செய்ய அதிகாரம் இல்லை. எனவே தமிழக அரசின் இடஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இதேபோல் குஜராத் மாநிலத்தில் மாநில பாடத்திட்டம் படித்த மாணவர்களுக்கு 60 சதவீதமும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 40 சதவீதம் என்ற அரசாணையை குஜராத் நீதிமன்றம் ரத்து செய்ததை அந்த மாணவர் தனது மனுவில் சுட்டிக் காட்டினார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் தெரிவிக்கையில், அரசு தரப்பு விளக்கம் கேட்காமல் எந்தவித தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கை வரும் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
உலகை மிரள வைக்கும் அந்த நாட்டுக்கு மோடி சுற்றுப்பயணம்!
vikatan

எம்.குமரேசன்

மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு நேற்று பிரதமர் மோடி டெல்லி திரும்பியுள்ள நிலையில், இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜூலை 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை இஸ்ரேல் நாட்டில் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நாதன்யாகு, அதிபர் ருவ்யன் ரெவ்லின் ஆகியோருடன் ராணுவ ஒத்துழைப்பு, பொருளாதார மேம்பாடு, இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.



இஸ்ரேல் நாட்டுடன் 1992-ம் ஆண்டு முதல் இந்தியா தூதரக உறவு வைத்திருக்கிறது. ஆனால், 25 ஆண்டுகளில் எந்த இந்திய பிரதமரும் இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதில்லை. மோடிதான் அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்லும் முதல் இந்திய பிரதமர். இஸ்ரேல் சுற்றுப்பயணத்தின்போது, முதல் உலகப் போரில் பலியான இந்திய வீரர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஹாஃபியா நகர கல்லறைத் தோட்டத்துக்கு சென்று பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார். தலைநகர் டெல்அவிவில் வசிக்கும் இந்திய மக்களிடையேவும் உரையாற்றுகிறார்.

இஸ்ரேல், இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு. இந்தியாவுக்கு ஆயுதங்கள், தொழில்நுட்பங்களை வழங்குவதில் முதலிடத்தில் உள்ளது. அதனால், வளைகுடா நாடுகள் மோடியின் இஸ்ரேல் சுற்றுப்பயணத்தை உண்ணிப்பாகக் கவனிக்கக்கூடும்.
சிறுவர்கள், இளைஞர்களிடம் மனம்விட்டுப் பேசாவிட்டால், போதை அபாயம்..! - மருத்துவ எச்சரிக்கை

இரா.தமிழ்க்கனல்




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில், குடிநோய், போதை எதிர்ப்பு தினம் ஜூன் 27 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் மரு.சுரேஷ்குமார் தலைமைவகித்தார். அப்போது, ”சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடமும் பெற்றோரும் ஆசிரியர்களும் நட்பாகப் பேசவேண்டும்; அப்படிப் பேசும்போதுதான் அவர்களிடம் உள்ள மனக் கஷ்டங்கள், கவலை, அழுத்தம் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வார்கள்; இதன் மூலம் அவர்கள் தங்களின் பிரச்னைக்கு குடி போன்ற போதையை நாடிவிடாமல் தடுக்கமுடியும்” என்று மரு. சுரேஷ்குமார் கூறினார்.

மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் பேசுகையில்,”இந்திய அளவில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். போதைப்பொருள் பயன்படுத்துவதால் தினமும் 10 பேர் தற்கொலைக்கு ஆளாவதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது” என்றார்.

மேலும், “குடி உட்பட போதைப்பழக்கமானது, ஒன்று, உடனிருக்கும் நண்பர்களால் கொண்டாட்டமாகத் தொடங்குவது. மற்றது, மனக் கஷ்டம், பதற்றம், கவலை, அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாக போதையை நாடுவது. இரண்டு வகையினருமே எப்போதாவது எனத் தொடங்கி, மாதம், வாரம் ஒரு முறை, சில நாட்களுக்கு ஒரு முறை, பிறகு தினசரி, கடைசியாக காலையில் எழுந்தவுடன் தொடங்கி எப்போதுமே போதையிலேயே இருப்பது என குடிநோயாளியாக மாறிவிடும் அபாயம் உண்டாகிறது. இப்படி குடிக்கு அடிமையாகிவிடும்போது கல்லீரல் வீக்கம், கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோய், குடல்குழிப்புண், ரத்தவாந்தி, ரத்தக்கொதிப்பு, கணையம் கெட்டு சர்க்கரை, நரம்புத்தளர்ச்சி, கைகால்நடுக்கம், ஞாபகமறதி, பாதம் எப்போதுமே கொதிப்பதைப் போல எரிச்சல், மன அழுத்தம், மனப் பதற்றம், சிந்தனைக் குழப்பம், சக மனிதர்கள் மீது சந்தேகம்கொள்ளும் நோய், முக்கியமாக நுரையீரல், இதய பாதிப்புகள் என உடல், மனம் இரண்டையும் கடுமையாக பாதிக்கும். குடிப்பவர்களில் 20% முதல் 30%வரை கட்டாயம் குடிநோயாளிகளாக மாறிவிடுவார்கள் ” என்று மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் தெரிவித்தார்.

குடிநோய்க்கான அவசரத் தீவிர சிகிச்சை, போதைசார்ந்த வலிப்புநோய் தடுப்பு சிகிச்சை, தீவிர குழப்பநோய்த் தடுப்பு சிகிச்சை, தயாமின் வைட்டமின் குறைபாடு சிகிச்சை, நுண்சத்துக் குறைபாடு சிகிச்சை, போதைசார்ந்த மனநோய்க்கான் அசிகிச்சை, போதைசார்ந்த உடல்நலக் கேட்டுக்கான ஆரம்பகட்டச் சிகிச்சை, போதையின் மீது பெரும்விருப்பத்தைக் கட்டுப்படுத்தும் சிகிச்சை, குடும்பத்தினருடனான கலந்துரையாடல், குடிநோய் பாதிக்கப்பட்டோருடன் குழுக் கலந்துரையாடல் ஆகியன, அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் வழங்கப்படும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைமை மருத்துவர் சுந்தரராசு, போதை எதிர்ப்பு விழிப்புணர்வுத் துண்டறிக்கைகளை நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடம் விநியோகித்தார். எலும்புசிகிச்சை வல்லுநர் இராதாகிருஷ்ணன், அறுவைச்சிகிச்சை வல்லுநர் தியாகராஜன் ஆகியோரும் பேசினர்.

நிகழ்ச்சியின் நிறைவாக, பொதுமக்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்கு மனநல மருத்துவர் விளக்கம் அளித்தார்.

விவசாயி ஒருவர் பேசுகையில்,” குடியில்லாமல் என்னால் இருக்கவேமுடியவில்லை; அந்த சமயத்தில் நன்றாகப் பழக்கமானவர்களிடமும் உறவினர்களிடமும் கோபத்தோடும் எரிச்சலோடும் சண்டை போடுகிறேன். பல நேரங்களில் வாங்கும் சம்பளம் முழுவதையும் குடித்தே காலியாக்கிவிடுகிறேன். தவறு எனத் தெரிகிறது. ஆனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதற்கு வழி உண்டா?” என்றார்.

நோயாளியின் உறவினரான இன்னொரு பெரியவரோ,” பெண்களும் சில நேரங்களில் குடிப்பதாக செய்தி பார்க்கிறோம். அவர்களுக்கு இந்த அளவுக்கு பிரச்னைகள் இருப்பதாகத் தகவல் இல்லையே?” என்று கேட்க, “ குடிநோயின் பாதிப்பு வயது, பால், படிப்பு வித்தியாசம் பார்த்து வருவதில்லை. இன்னாருக்குதான் பாதிப்பு வரும் எனச் சொல்லமுடியாது” என்றார் மருத்துவர்.

அவ்வப்போது குடித்தால் பாதிப்பு வராதுதானே என்ற கேள்விக்கு பதிலளித்த மருத்துவர்,” குடியோ வேறு போதைப்பொருள்களோ எப்போது கட்டுப்பாட்டைத் தாண்டும் எனக் கூறமுடியாது. ஆரம்பத்தில் கொஞ்சம்தானே, ஒரு முறைதானே என்றுதான் தொடங்கும். பிறகு மோசமாகிவிடும் என்பதுதான்.” என்றார் சீரியஸுடன்.

” நான் தினமும் என்னுடைய வேலைகளைச் செய்துவிடுகிறேன். இரவு 10 மணிக்கு குடிக்கிறேன். எனக்கு எந்த பாதிப்பும் இல்லையே? இதை எப்படி எடுத்துக்கொள்வது?” எனக் கேட்டார், ஒருவர். அதற்கு, அந்த நேரத்தில்தான் குடிப்பீர்களா என்று பதிலுக்குக் கேட்டார், மருத்துவர். ’அந்த நேரத்தில் சரியாகக் குடிக்கத் தொடங்கிவிடுவேன் என்று அவர் உடனடியாக பதில்கூற, “ இந்த மன உந்துதல் குடிநோயின் அறிகுறிதான்” என்று விளக்கம் அளித்தார், மனநல மருத்துவர்.
ஒரு பள்ளி... ஒரே மாணவி... இரண்டு ஆசிரியர்கள்... அரசுப் பள்ளி விநோதம்!

VIKATAN 
RAGHAVAN M
க.சதீஷ்குமார்





பல அரசுப் பள்ளிகள் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் தவிக்கும் நிலையில், ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் ஒரே ஒரு மாணவிக்காக, இரண்டு ஆசிரியர்கள் பணிபுரியும் விநோதம் இதே தமிழகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே இருக்கும் ஊர், வடகரை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக மஞ்சள் ஆற்றங்கரை ஓரத்தில் முட்புதர்காட்டுக்கு நடுவே அமைந்திருக்கிறது, அந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. அங்கே இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, மகாஸ்ரீ. நாம் சென்றபோது, பள்ளியின் தலைமை ஆசிரியை மகாலெட்சுமி பாடம் நடத்திக்கொண்டிருந்தார். மற்றொரு ஆசிரியரான அன்பரசன் மருத்துவ விடுப்பில் இருக்கிறாராம். தலைமை ஆசிரியை, தனது பாதுகாப்புக்காகத் தன் மகனை அழைத்துவந்திருக்கிறார். மகன் வராத நேரத்தில், பகுதி நேர ஆசிரியை ஒருவரைத் துணைக்கு வைத்துக்கொள்வாராம்.



மாணவியான மகாஸ்ரீ, “எங்க ஊர் வாடகுடி. என் அப்பா ரவிச்சந்திரன், செத்துட்டாங்க, அம்மா பேரு மகாலெட்சுமி. என் அக்காவும் இங்கேதான் படிச்சாங்க. அவுங்க அஞ்சாங் கிளாஸ் பாஸ் பண்ணிட்டதால வேற பள்ளிக்கூடம் போயிட்டாங்க. இங்கே என்னோடு விளையாட யாருமே இல்ல” என்றாள் சோகமாக.



“இந்த ஒரு புள்ளைக்காக சமைக்க வேண்டாம்னு பக்கத்துல இருக்கிற அரங்கங்குடி பள்ளிக்கூடத்திலிருந்து தினமும் சத்துணவைக் கொண்டுவந்து கொடுப்பேன். கலகலன்னு நிறைய புள்ளைகளோடு இருந்த இந்தப் பள்ளிக்கூடம் வெறிச்சோடி போச்சேன்னு வருத்தமா இருக்கு” என்கிறார், சமையல் உதவியாளர் சாவித்திரி.

இந்தப் பள்ளிக்கு ஏன் இப்படி ஒரு நிலை வந்தது? மாணவர்கள் என்ன ஆனார்கள் என அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூகச் சேவகரான ஹஜாநஜிமுதீனிடம் கேட்டோம்.



“சுதந்திரத்துக்கு முன்பு திண்ணைப் பள்ளியாக இருந்த இடம் இது. 1949-ம் ஆண்டு குருகுல பள்ளியாகவும் 1962-ம் ஆண்டு முதல் அரசு தொடக்கப் பள்ளியாகவும் மாறிச்சு. இப்போ, ஊருக்குள்ளே தனியார் நர்சரி பள்ளியில் ஆரம்பிச்சு, இஸ்லாமியர் நடத்தும் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வரை வந்துடுச்சு. இங்கே முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கிறதால், அவங்க குழந்தைங்க அங்கேயே படிக்கிறாங்க. இங்கே பக்கத்துல இருக்கிற அரங்கங்குடியில் தொடக்கப்பள்ளியோடு அரசு உயர்நிலைப் பள்ளியும் இருக்கு. அங்கே ஆங்கில வழி கல்வி, கம்ப்யூட்டர் கிளாஸ் எல்லாம் இருக்கிறதால ஜனங்க பிள்ளைங்களைச் சேர்க்க அங்கேதான் போறாங்க. இந்த ஸ்கூல் இருக்கிற இடமும் புதர் மண்டிக் கிடக்கு. அதனால், இந்த ஸ்கூலில் யாரையும் சேர்க்கறதில்லை. ஒரே ஒரு மாணவிக்காக இரண்டு ஆசிரியர்கள் வேலை செய்யறாங்க. அவங்களுக்கு கவர்மென்ட் சம்பளம். அந்த மாணவியை அரங்கங்குடி பள்ளியில் சேர்த்துவிட்டு, ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும் பள்ளிக்கு இந்த ஆசிரியர்களை மாத்தினால், அரசுக்கும் நல்லது; அங்கே படிக்கவரும் குழந்தைகளுக்கும் உபயோகமா இருக்கும். செய்வாங்களா?'' என்கிறார் ஆதங்கத்துடன்.



கிராமப் பிரமுகரான பவுஜி, “இந்த ஸ்கூலுக்கு புலிகண்டமுத்தூர், மில்லாத்தூர் ஆகிய ஊர்களிலிருந்துதான் பிள்ளைங்க வந்துட்டிருந்தாங்க. ஆனால், ஒரு கிலோமீட்டருக்கும் மேலே நடந்து இங்கே வர்றது சிரமமா இருக்கு. அதனால், எங்க ஜமாத் சார்பில் பேசி, புலிகண்டமுத்தூரிலேயே பள்ளிக்கூடம் கட்டிக்கொடுக்க ரெடியா இருக்கோம். இது விஷயமா பூம்புகார் எம்.எல்.ஏ. பவுன்ராஜ் அவர்களிடமும் மனு கொடுத்திருக்கோம்'' என்றார்.



பெயர்குறிப்பிட விரும்பாத பிரமுகர் ஒருவர், “இந்தப் பள்ளியைச் சுற்றி விஷ ஜந்துகள் அதிகம் இருக்கு. பள்ளி நேரம் போக மத்த நேரங்களில் சமூக விரோதிங்க குடிக்கிற பார் மாதிரி பள்ளியை உபயோகப்படுத்துறாங்க. அதைவிடக் கொடுமை, அந்த ஸ்கூல் ஆசிரியரே வேலை நேரத்திலேயே குடிச்சுட்டு பள்ளிக்கு வர்றார். அவருக்கும், தலைமை ஆசிரியைக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். அதனால், தனது பாதுகாப்புக்கு ஒருத்தரைக் கூடவே வெச்சுட்டிருக்கிற அளவுக்கு இருக்கு நிலைமை. இந்த லட்சணத்துல எந்த பெத்தவங்கதான் அவங்க குழந்தையைக் கொண்டுபோய் சேர்ப்பாங்க. இது இங்கே மட்டுமில்லீங்க; தேவனூர், அப்பராசன்புத்தூர் என சுற்றுவட்டாரத்தில் இன்னும் சில பள்ளிகளில் நான்கு, ஐந்து மாணவர்களுக்காகப் பள்ளிக்கூடம் நடக்குது. அங்கேயெல்லாம் ரெண்டு ரெண்டு ஆசிரியர்கள் இருக்காங்க. அரசுப் பணம்தான் விரயமாகுது. கவர்மென்ட் இதையெல்லாம் ஆய்வுசெஞ்சு சரிசெய்யணும்” என்றார்.

இந்தப் பள்ளியின் நிலைகுறித்து நாகை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆஷா கிறிஸ்டி எமரால்டு கவனத்துக்குக் கொண்டுசென்றோம். “பள்ளியை மூடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுமாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை எப்படி அதிகப்படுத்தலாம்னுதான் பார்க்கணும். தேவனூர், அப்பராசன்புத்தூர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்துட்டு இருக்காங்க” என்றவர், உடனடியாகச் செயலில் இறங்கினார். தனக்குக் கீழே உள்ள அலுவலர்களை அழைத்துக்கொண்டு வடகரைக்குக் கிளம்பியவர், வீடு வீடாகச் சென்று அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வலியுறுத்தினார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரிடம் பேசியபோது, “நான் தற்போதுதான் வந்திருக்கிறேன். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலந்து பேசிவிட்டு விரைந்து முடிவு எடுக்கிறேன்” என்றார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘இந்த ஆண்டு புதிதாக 30 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார். அதற்கு முன்பு, இருக்கும் பள்ளிகளைச் சீரமைத்து, போதிய மாணவர்களைச் சேர்ப்பதில் கவனம் செலுத்தினால் நல்லது.
Porur flyover puts pedestrians at risk

By Venkatesan Parthasarathy | Express News Service | Published: 29th June 2017 08:50 AM |



Students cross Mount Poonamallee Road near Porur Police Station signal on Tuesday. The absence of speed breakers means it’s risky business | D Sampathkumar

CHENNAI: It took 7 long years for the Porur flyover to open and on Tuesday, a schoolgirl, studying at St Johns Matriculation School in New Colony, took an equal number of minutes, if not more, to cross the Mount Poonamallee Road on which the flyover has come up. The flyover has reduced traffic congestion at the nearby Porur junction to a considerable extent, but its design has ignored pedestrians.

With vehicles going towards Ramapuram speeding down from the flyover unrestricted, crossing the Porur Police Station (PPS) signal is proving a dangerous task for pedestrians.

According to locals, this area has 4-5 schools in the vicinity, where a majority of students are required to cross the Mount Poonamallee Road to board an MTC bus or other modes of public transport. “After the flyover was inaugurated, the PPS signal was shut down and temporary barricades were placed to prevent vehicles from crossing, which would have otherwise led to the piling up of traffic,” a traffic policeman told Express.

But this situation has caused immense hardship to pedestrians, as they are unable to cross the road without the intervention of policemen. “There are plans to install a pedestrian-only signal but, even then, we have to regulate traffic,” said the cop.

Locals, who agree the flyover has led to less waiting time at the Porur junction, worry about its effect on PPS signal. “The PPS signal must be closed down permanently and a pedestrian foot overbridge should be set up,” said Amal Raj, an auto driver from a nearby stand.

As a temporary solution, D Ranjitha, a resident of Bharath Nagar, suggested that authorities should construct speed breakers near the base of the flyover. She said the weekend saw less traffic than usual. “Vehicles proceed at a fast pace on the flyover. My main concern is that pedestrians have been ignored. There must be speed breakers near the PPS signal just like it is at Usman Road flyover in T Nagar near Ranganathan Street,” she said.

Factfile

The flyover is at the junction of Mount Poonamallee Road-Arcot Road in Porur
With two lanes on each side, it cost D54 crore
It measures 505 metres in length and 17.20 metres in width
Work started in 2010 but was stalled as there was difficulty in shifting an underground Metro Water line
The Highways Department of TN was forced to change the flyover’s design in 2014
Unprecedented demand for commerce and science streams this year

By Ashmita Gupta | Express News Service | Published: 29th June 2017 08:52 AM |

CHENNAI: There has been unprecedented demand for commerce and science streams this year when compared to previous years. Though the admission process is almost over, colleges continue to get flooded with requests from parents. All leading institutions have seen a rise of at least 20-25% in applications.

While BCom general is the hot favourite, maths and physics are preferred among pure science subjects. English and political science are popular choices among humanities students.

S Vincent, Dean of Research, Loyola College, said last year the UG and PG applications received were 32,000, while the number has shot up to 46,000 this year. “Almost all the science departments have been filled. We are still getting requests from parents to accommodate their children,” he said.

The premier college is holding back from declaring the last date for admission to ensure maximum students are accommodated. Meanwhile, due to increase in demand, University of Madras had permitted 20% extra seats. In some departments, the strength is 50 and in others, the strength is 60 or 70.

It’s the same with MOP Vaishnav College. Principal Lalitha Balakrishnan said there has been a 25% increase in the number of applications received this year. “We received more than 20,000 applications compared to 16,000 last year,” she attributed the trend to declining interest in engineering. “It is becoming difficult to meet the demand. There were many students who scored 800 out of 800.”

Ethiraj College, Presidency College and Asan Memorial College are all flooded with applications. “Many students who would have otherwise opted for engineering are taking up pure science,” said Sheela Kirubakaram, Vice-Principal of Ethiraj College. In Presidency College last year, the number of applications received was 6,000, this year the number is around 9,000, said Principal T Brahmananda Perumal. It’s the same story at Asan Memorial College.

Besides BCom, physics and mathematics, students are also keen on microbiology, biochemistry and computer science. Perumal said physics and maths were high in demand in Presidency College. MOP Vaishnav College said 400 applications were received for media science for the 50 available seats.

With reduced job opportunities in the field, engineering courses have gone out of vogue, students are more inclined towards pure science and commerce streams, said a retired professor.
பெட்டிக்கடையிலும் போதைப்பொருள்... பெற்றோர்களே உஷார்!
எஸ்.கிருபாகரன்


இடிந்து போய் இருக்கிறது அந்தக் குடும்பம். தங்கள் குடும்பத்து இளைய மகனை அந்தக்குடும்பம் இழந்து இன்றோடு 10 ஆண்டுகள் ஆகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில்தான் அவன் இறந்தான். போதைப் பொருள் பயன்படுத்துதல் மற்றும் சட்டத்துக்குப் புறம்பாக கடத்துதலுக்கு எதிராக சர்வதேச தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் அவனது மரணம் நிகழ்ந்தது ஆச்சர்யமான அதிர்ச்சி. தீபக்கின் மரணத்துக்குக் காரணம், ஒயிட்னர் எனும் பயங்கரம்.

ஒயிட்னர்...? டைப் செய்கிறபோது வரும் எழுத்துப்பிழைகளை அழித்துத்திருத்தப் பயன்படும் ஒருவகை திரவம். இரண்டு பாட்டில்களைக் கொண்ட இதன் பாக்கெட்டில் ஒன்று தண்ணீர்போன்ற திரவம் இருக்கும். மற்றொன்று சுண்ணாம்பை கரைத்ததுபோல் வெண்ணிற வடிவ திரவம். இரண்டையும் கலந்து எழுத்துகளை அழிப்பதுவே இதன் பயன்பாடு. சாதாரண ஒரு அழிப்பானாக மட்டுமே அறியவந்த ஒயிட்னரின் இன்னொரு முகம் 2004-ம் ஆண்டு தெரியவந்தபோது ஒட்டுமொத்த பெற்றோர்களும் அதிர்ந்து நின்றனர். ஆம், இந்தத் திரவத்தில் கலந்துள்ள டொலுவீனுக்கு மயக்கமும் ஒரு கிறுகிறுப்பான உணர்வையும் தரும் குணம் உண்டு. எனவே, பள்ளி மாணவர்கள் பலர் இதை வீட்டுக்குத்தெரியாமல் வாங்கி மறைத்து வைத்து பயன்படுத்தி வந்தனர். பள்ளிக்கூட வாசலில் நொறுக்குத்தீனிகளைவிட இதன் விற்பனை பலமடங்கு அந்நாளில்.

ஒயிட்னரின் இரு பாட்டில்களில் சுண்ணாம்பு போன்ற திரவத்தை ஒரு கர்ச்சீப்பில் ஊற்றி காயவைத்து தேவைப்பட்ட நேரத்தில் நீர் போன்ற திரவத்தை அதில் ஊற்றி முகர்ந்துபார்த்தால் ஒரு கிறுகிறுப்பு ஏற்படும். ஒரு மணிநேரத்துக்கு மேலாக நீடிக்கும் இந்த மயக்கம் சிறுவர்களுக்கு உற்சாகத்தைத் தரும். குடிசைப்பகுதிகளில் வசிக்கும் சிறுசிறு வேலைகளில் ஈடுபடும் சிறுவர்களே இந்தப் பழக்கத்துக்கு அடிமையானார்கள். இவர்கள் மூலம் பள்ளிச்சிறுவர்களுக்கு அறிமுகமாகி பெற்றோர்களின் கனவை கலைத்தது இந்த ஒயிட்னர்.
சிறுவர்கள் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி சீரழிந்துவருவதை கடந்த 2004-ம் ஆண்டு விகடன்தான் தனது 3 பக்க கட்டுரையின் மூலம் வெளியுலகிற்கு முதன்முதலாகச் சொன்னது. அதன்பின் பள்ளி மாணவர்களுக்கு இது விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டது.

ஒயிட்னர் எனும் கொடூரத்துக்கு (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) தங்கள் பிள்ளைகளில் ஒருவனை இழந்து நிற்கிறார்கள் வேலூரைச் சேர்ந்த மோகன் -தீபா தம்பதி. வேலை நிமித்தமாக பல வருடங்களுக்கு முன் பெங்களுருக்குக் குடியேறிவிட்டாலும் தன் இரண்டாவது பிள்ளை தீபக்கை வேலூரில் தனது பெற்றோர் வீட்டிலேயே வளர்த்தனர். அதுதான் தீபக்கின் வாழ்வை மாற்றி அவனது வாழ்வை சீரழித்துவிட்டது. பெற்றோர் கண்காணிப்பு இல்லாதது, தாத்தா பாட்டியிடம் அளவுக்கு மீறிய செல்லம், எதைக்கேட்டாலும் போட்டி போட்டு வாங்கித்தர தாய்மாமாக்கள்... ஒரு பிள்ளையின் வாழ்வை சீரழித்தவை இவைதான் என நடந்ததைக் கண்ணீருடன் நம்மிடம் சொல்ல ஆரம்பித்தார் தமிழக அரசில் உயர் பதவியில் இருக்கும் தீபக்கின் மாமா.

“தீபக் சின்னவயசிலிருந்தே தாத்தா பாட்டி செல்லம். அதனால் என் அக்கா குடும்பம் வேலை நிமித்தம் பெங்களுரு சென்றபோதும் அவன் இங்கேயே தங்கிவிட்டான். இங்குள்ள அரசுப்பள்ளியில்தான் படித்தான். எப்போதும் துறுதுறுவென இருப்பான். படிப்பில் சுட்டி. பெற்றோரைப் பிரிந்து இருந்ததால் அவன் கேட்டதையெல்லாம் வாங்கித்தருவோம். தாத்தா பாட்டி சரியான செல்லம். இத்தனை இருந்தும் நாங்கள் அவனை கண்காணிக்கத்தவறிவிட்டோம். காலையில் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவன் எத்தனை மணிக்கு வீடு திரும்பினாலும் கேட்டதில்லை. காரணம் வேலை நிமித்தமாக ஆளுக்கொரு திசையில் பறந்துகொண்டிருந்தோம். இந்நிலையில், அவன் 7-வது படித்துக்கொண்டிருந்தபோது அவனிடம் சில மாற்றங்கள் காணப்பட்டன. ஆள் இளைக்க ஆரம்பித்தான். திடீரென நள்ளிரவு 12 மணிக்கு எழுந்து பசிக்கிறது என்பான். பள்ளி விட்டு வந்ததும் வழக்கமாக தாத்தா பாட்டியிடம் பேசுபவன் கொஞ்சகாலமாக வீட்டின் ஒரு மூலையில் போய் படுத்துக்கொள்ள ஆரம்பிப்பான். சட்டை பேன்ட்டில் வெள்ளை வெள்ளையாய் கரை தென்பட்டது. யாருடனும் பேசுவதைக் குறைத்துக்கொண்டான். எங்களுக்கு ஏதோ பொறி தட்டியது. ஒருநாள் பள்ளிக்குச் செல்வதாக கூறி கிளம்பியவனை பின்தொடர்ந்து சென்றபோது அதிர்ச்சியான காட்சியைக் கண்டோம். பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வந்தவன், அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஒரு பாழடைந்த கோவிலுக்குள் சென்றான். பூஜை நடக்காத அந்த கோவிலில் அவனுக்கு என்ன வேலை என்ற குழப்பத்தோடு பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளானோம். தன் பாக்கெட்டில் இருந்து ஒயிட்னரை ஒரு துணியில் ஊற்றி பிழிந்து ஏற்கெனவே அங்கிருந்த பேப்பர் பொறுக்கும் பையன்களுடன் சேர்ந்து அதை மூக்கால் உறிஞ்ச ஆரம்பித்தான். நாங்கள் அதிர்ச்சியின் விளிம்புக்குப் போனோம்.

கோபத்தில் அவனை அடித்து அழைத்து வந்தோம். பள்ளியில் விசாரித்தபோது பலநாள்கள் அவன் பள்ளிக்கே வராதது தெரிந்தது. அதுமுதல் அவனைக் கண்காணிக்க ஆரம்பித்தோம். நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளை இப்படி ஆகிவிட்டானே என உணர்ச்சிவயப்பட்டு அவனைக் கடுமையாகக் கண்டித்ததோடு உறவினர்களிடமும் அவனைக் குறை சொல்லி பேச ஆரம்பித்தோம். அது அவனை திருத்துவதற்குப் பதிலாக இன்னும் மோசமாக ஒயிட்னருக்கு அடிமையாக்கிவிட்டது. ஒரு கட்டத்தில் அவனது பழக்கத்தைக் கண்டிக்கிறோம் என்பதால் அவன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். சில மாதங்கள் அலைந்து திரிந்து கண்டுபிடித்தோம். வீட்டுக்கு வந்து சில நாள்கள் நன்றாக இருந்தான். ஆனாலும், பெரியவர்கள் அறிவுரை சொல்கிறேன் என அவனைக் கண்டித்துக்கொண்டே இருந்தது அவனுக்குப்பிடிக்காமல் திரும்பவும் ஓடிவிட்டான். இப்படி பலமுறை அவனைத் தேடி அழைத்துவருவதும் அவன் திரும்ப ஓடுவதுமாக இருந்தான். இதற்கிடையில் பள்ளியிலிருந்தும் அவனை நீக்கிவிட்டார்கள்.

கடைசியாக ஒரு நாள் ஓடியவனை ஆந்திரா மாநில காவல்நிலையத்தில் கண்டுபிடித்தோம். அங்குள்ள ரயில்நிலையத்தில் சந்தேகத்தின்பேரில் அவனைப் பிடித்திருந்ததாகச் சொன்னார்கள். அவன் தங்கியிருந்த ரயில்நிலையம் இப்படி ஊரைவிட்டு ஓடிவரும் சிறுவர்களுக்கான வேடந்தாங்கலாக இருந்திருக்கிறது. பகலில் கூலிவேலைக்குச் சென்றும் இரவில் திருட்டு வழிப்பறியில் ஈடுபடுவதும்தான் அந்தச் சிறுவர்களின் வேலை. அங்கிருந்து மீட்டு வந்தபின் சில காலம் நன்றாக இருந்தான். சென்னையில் மனநல மருத்துவர் ருத்ரனிடம் சிகிச்சை அளித்தோம். உடலும் மனமும் சற்றுத் தேறினான். எல்லோரும் மகிழ்ச்சியடைந்தோம். இங்கிருந்தால் நண்பர்கள் உறவினர்கள் கேலி பேசுவார்கள் என்பதால்தான் விடுதியில் தங்கிப் படிப்பதாகச் சொன்னான். எந்த மறுப்புமின்றி பெங்களூரில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்த்தோம்.

நம் பிள்ளை மீண்டும் நல்வழிக்கு வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் இருந்த எங்களுக்குத் திடீரென ஒருநாள் அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தகவல் வந்தது. தீராத வயிற்றுவலியினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவன் 3 நாளைக்குப்பின் இறந்தான். பல வருடங்கள் டொலுவீன் கலந்த ஒயிட்னரை உறிஞ்சி இழுத்ததால் நுரையீரல் செயலிழந்து மரணம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் சொன்னார்கள். எங்கள் வாழ்வின் நம்பிக்கையைப் பொறுப்பற்ற எங்கள் செயலால் தொலைத்துவிட்டோம்” என்றார் கண்களில் வழிந்த கண்ணீரைத்துடைத்தபடி.

தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர், பிள்ளைகள் பெற்றோர்களின் நேரடிக் கண்காணிப்பில் வளர்வதுதான் அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது என்பதை நாங்கள் புரிந்துகொள்ள ஒரு பிள்ளையைப் பலிகொடுக்கவேண்டியதானது. எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் உங்கள் பிள்ளைகளுக்கென நேரத்தை ஒதுக்கி அவர்களிடம் பேசுங்கள். அவர்கள் மனதில் உள்ளதை அறிய முற்படுங்கள். அவர்கள் எதை விரும்புகிறார்கள் என அறிந்து அதில் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். சிறுசிறுதவறுக்குக் கோலைத் தூக்காதீர்கள். அதேசமயம் அது தவறு என்பதை உணர்த்த முற்படுங்கள். பிள்ளையின் ஒவ்வொரு விஷயத்தையும் அவனுக்குத்தெரியாமல் கண்காணியுங்கள். அது அவனுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பள்ளியில் அவனது நண்பர்கள் யார் எனத் தெரிந்துகொள்ளுங்கள். யாருடனாவது அதீத நட்பு பாராட்டினால் அதற்கான காரணத்தை அறிய முயற்சியுங்கள். தவறான நட்பு எனத் தெரியவந்தால் அதை அவனுக்குப் புரியவையுங்கள். அம்மாதிரி சமயங்களில் அவனிடம் அதிக நெருக்கம் காட்டிப் பழகுங்கள்.

வழக்கத்துக்கு மாறாக அவனிடம் சிறுமாற்றம் தெரிந்தாலும் அது எதனால் என்பதைக் கவனியுங்கள். பள்ளியில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் அவனிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள். சிறுசிறுதவறுகளுக்கு ஒரிருமுறைக்கு மேல் கேட்டு அவர்களை நச்சரிப்பு செய்யாதீர்கள். அதுவே அவனுக்கு வெளியுலகத்தொடர்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும். எங்கள் பிள்ளையை நாங்கள் இழக்க இந்த தவறுகள்தான் காரணமானது” என்றார் வேதனையான குரலில்.

தீபக்கின் வாழ்க்கை சொல்லும் பாடம் தீபக்குகளுக்கா....பெற்றோர்களுக்கா?...உஷார் பெற்றோர்களே!
புதிய பிராட்பேண்டு கனெக்‌ஷன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..! #Broadband

கார்க்கிபவா




மகன் மற்றும் மகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு ஸ்கைப் காலுக்காக காத்திருக்கும் பெற்றோரில் இருந்து வீட்டிலே புதிதாக ஸ்டார்ட்அப் தொடங்கியவர் வரை அனைவருக்கும் இணையம் தேவை. ஒவ்வொருவரின் தேவையும் வித்தியாசமானது. 10 ஜிபி என்றாலும் லைட்னிங் ஃபாஸ்ட் தேவை சிலருக்கு. கொஞ்சம் மெதுவாக இருந்தாலும், நூற்றுக்கணக்கான ஜிபி அளவில் டொரண்ட் டவுன்லோடு செய்வது சிலருக்கு வழக்கம். ஜியோவின் டேட்டா அட்டாக் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களை மட்டுமல்ல; பிராட்பேண்டு நிறுவனங்களையும் வெகுவாக பாதித்திருக்கிறது. 50 ஜி.பி.க்கே சொத்தை எழுதிக் கேட்டவர்கள் இப்போது 500 ஜிபி, 1000 ஜிபி என சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அனைத்து விளம்பரங்களிலும் தவறாமல் கண்டிஷன் அப்ளை ஒன்றாவது இருந்துவிடுகிறது. இந்தப் புதிர்களைக் கடந்து நமக்கான சரியான கனெக்‌ஷனை கண்டறிவது சாதாரண விஷயம் கிடையாது. பல விஷயங்களை கவனத்தில் கொள்வதுடன் இன்னும் சில விஷயங்களும் இருக்கின்றன. நீங்கள் புதிதாய் ஒரு பிராட்பேண்டு கனெக்‌ஷன் வாங்குவதாக இருந்தால் இதையெல்லாம் கவனிக்க வேண்டும்.

யூஸேஜ் லிமிட்:

அன்லிமிட்டெட் என்ற வார்த்தைக்கு நமது நாட்டில் அர்த்தமே வேறு. அதுவும் இணையச்சேவையில் நிச்சயம் அன்லிமிட்டெட் கிடையாது. அதற்கு ஒரு கண்டிஷன் அப்ளை இருக்கும். உங்கள் பிராட்பேண்டு நிறுவனம், அப்லோடு மற்றும் டவுன்லோடு இரண்டையும் சேர்த்து லிமிட் தருகிறதா அல்லது டவுன்லோடு மட்டும் கணக்கில் கொள்கிறதா என்பதை முதலில் கவனத்தில் கொள்ளவும். எதையும் டவுன்லோடு செய்யாமல் இருப்பதாக நினைத்து, நீங்கள் பல புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டிருப்பீர்கள். அவையெல்லாம் கணக்கில் இட்டு, 20-ம் தேதியே லிமிட் தீர்ந்ததாக ஓலை வரும். எனவே, புது கனெக்‌ஷன் எடுக்கும் போது FUP - Fair usage policy எவ்வளவு, அதில் அப்லோடு மற்றும் டவுன்லோடு எவ்வளவு என்பதைக் கவனிக்கவும்.

கண்டென்ஷன் ரேஷியோ (Contention ratio)

யூஸேஜ் லிமிட்டை பொதுவாக அனைவரும் அறிவார்கள். ஆனால், கண்டென்ஷன் ரேஷியோவை கவனித்திருக்க மாட்டார்கள். ஒரு நேரத்தில் எத்தனை பேர் இணையத்தை பகிர்கிறார்கள் என்பதைத்தான் இந்த ரேஷியோ குறிப்பிடுகிறது. இப்போதெல்லாம் கேம்ஸ் ஆட 6 வயது குழந்தைத் தொடங்கி சீரியல் பார்க்க 60 வயது பாட்டி வரை அனைவருக்கும் நெட் தேவை. எனவே, உங்கள் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள், ஒரு நேரத்தில் எத்தனை கருவிகளில் இணையத்தை பயன்படுத்துவீர்கள் என்பதையெல்லாம் யோசித்து முடிவு செய்ய வேண்டும்.

வேகம்:

பிராட்பேண்டுகளில் டவுன்லோடு வேகம் என்பதும் அப்லோடு வேகம் ஒன்றாக இருக்காது. பொதுவாக விளம்பரங்களில் சொல்லப்படும் வேகம் என்பதும் நிஜத்தில் வருவதும் வேறு வேறு. டவுன்லோடு வேகத்தை மட்டுமே நம்பாமல், அப்லோடு வேகத்தையும் கவனித்து முடிவு எடுக்க வேண்டும். வாரம் ஒரு தடவையாவது இணைய வேகத்தை சோதித்துப் பார்க்க வேண்டும்.

ஃபைபர் கேபிள்:

இன்னமும் இந்தியாவின் பல நகரங்களுக்கு ஃபைபர் கேபிள் வரவில்லை. காப்பர் கேபிள்கள் மூலமே இணையம் வந்துகொண்டிருக்கிறது. DSL எனப்படும் இந்த டெக்னாலஜி அரதப்பழசானது. இதில் இணையத்தின் வேகம் மிகவும் குறைவு. புதிதாக நீங்கள் வாங்கவிருக்கும் இணையச்சேவை, ஃபைபர் டு த ஹோம் ( (FTTH) தானா என்பதை கவனிக்கத் தவறாதீர்கள். உங்கள் பகுதிக்கு இன்னமும் ஃபைபர் கேபிள் வரவில்லையென்றால், அதுபற்றி நிறுவனத்தின் கஸ்டமர் கேரில் கேட்டுப் பாருங்கள். விரைவில் வரக்கூடும் என்றால் காத்திருக்கலாம்.

பிராட்பேண்டு சேவை என்பது இன்னொரு சிம் கார்டு போன்றது கிடையாது. வாங்கியபின், வேண்டாமென்றால் மாற்றுவதும் எளிது கிடையாது. எனவே, கவனமாக தேர்ந்தெடுக்கவும். அதே சமயம், இருக்கும் சேவையில் பிரச்னை என்றால், மாற்றவும் தயங்க வேண்டாம். ஓர் ஆண்டுக்கு வாங்கினால், விலை குறைவு என்பார்கள். ஆனால், வாங்கிய இரண்டாவது மாதத்தில் இருந்தே பிரச்னை கொடுக்கும். கஸ்டமர் கேர்களும் கண்டுகொள்ளாது. ஏற்கெனவே ஓர் ஆண்டுக்கு பணம் செலுத்தியிருப்பதால, விலகவும் முடியாது. எனவே, மாதாந்திர பிளான்களே பெஸ்ட். சேவை சரியில்லையெனில் மாற்றிக்கொள்ள இது ஏதுவாக இருக்கும்.
மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு... சிபிஎஸ்இ மாணவர் வழக்கு!

இரா. குருபிரசாத்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில், முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்கள் ஒருவர்கூட இடம்பெறவில்லை. இதனால், மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அதிர்ச்சியைத் தணிக்கும் வகையில், மருத்துவப் படிப்பில் 85 சதவிகித இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.



இதைத்தொடர்ந்து, மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. இந்நிலையில், மருத்துவப் படிப்பில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு, 85 சதவிகித ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தஞ்சையைச் சேர்ந்த சிபிஎஸ்இ மாணவர் தாரணீஷ் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

குறிப்பாக, 'சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 15 சதவிகித ஒதுக்கீடு என்பதை ஏற்க முடியாது. ஒவ்வோர் ஆண்டும், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் குழப்பம் நடைபெறுகிறது' என்று தனது மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் எம்சிஐ (இந்திய மருத்துவ கவுன்சில்) பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஜூலை 5-ம் தேதி பதிலளிப்பதாக, தமிழக அரசு கூறியுள்ளது.

அஞ்சலகங்களில் ஆதார் எண் பெறும் வசதி அறிமுகப்படுத்த திட்டம்

ப.முரளிதரன்

அஞ்சல் நிலையங்களில் ஆதார் எண் பெறும் வசதி அறிமுகப் படுத்தப்பட உள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக அஞ்சல் நிலையங்களில் ஆதார் எண் பெறும் வசதி அறிமுகப் படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு சர்க்கிள் அஞ்சல் துறை தலைவர் (அஞ்சல் மற்றும் வர்த்தக வளர்ச்சி) ஜே.டி.வெங்கடேஸ்வரலு கூறியதாவது:

அஞ்சல் நிலையங்கள் மூலம் ஆதார் எண் பெறுவதற்காக பதிவு செய்வது மற்றும் ஏற்கெனவே பெற்ற ஆதார் அட்டையில் திருத்தம் செய்வது ஆகிய புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதற்காக 15 தலைமை அஞ்சல் நிலையங்கள் மற்றும் 2515 துணை அஞ்சல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் உள்ள தலைமை அஞ்சல் நிலையங்களில் ஆதார் எண் பதிவு செய்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. துணை அஞ்சல் நிலையங்களில் ஏற்கெனவே பெற்ற ஆதார் அட்டை யில் திருத்தங்கள் செய்யலாம். உதாரணமாக, பெயர் திருத்தம், முகவரி திருத்தம், மொபைல் எண் சேர்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

இப்பணியை செய்வதற்காக ஒவ்வொரு அஞ்சல் நிலையத்தில் இருந்தும் தலா 2 ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக ஏற்கெனவே 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்பயிற்சியை மற்ற ஊழியர்களுக்கு அளிப்பார்கள். மேலும், ஆதார் எண் பதிவு செய்வதற்காக பயோ மெட்ரிக் கருவிகள் வாங்கப்பட உள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.80 லட்சம் செலவாகும். இதற்கான நிதி கிடைத்ததும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆகஸ்ட் 5-ல் குடியரசு துணை தலைவர் தேர்தல்: நஜீம் ஜைதி

பிடிஐ
குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, "தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவு பெறுகிறது.

இதனையடுத்து புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நடைபெறும். தேர்தலில் போட்டியிடுவோர் ஜூலை 4-ம் தேதி முதல் ஜூலை 18 வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூலை 19-ம் தேதியன்று நடைபெறும். ஜூலை 21-ம் தேதி வேட்புமனுக்ளை வாபஸ் பெற கடைசி நாள்.

ஆகஸ்ட் 5-ம் தேதியன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் நடைபெறும் ஆகஸ்ட் 5-ம் தேதி மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் அதிகாரியாக மாநிலங்களவைச் செயலாளர் சும்ஷேர் கே ஷெரீப் செயல்படுவார்.
தேர்தலில் வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தேர்வை தெரியப்படுத்த பிரத்யேக பேனாக்களை பயன்படுத்துவர்" எனத் தெரிவித்தார்.

தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advocate moves contempt plea against deemed varsities, Centac

Says colleges did not comply with the court’s interim order

The Madras High Court on Wednesday directed four medical colleges affiliated to deemed universities in Puducherry and the Convener of Centralised Admission Committee (CENTAC) to file their reply by July 3 on a contempt plea moved against them in connection with post-graduate medical admission.
The issue pertains to a public interest litigation petition moved by advocate V.B.R. Menon alleging that the deemed universities in Puducherry were refusing to accept students admitted through common counselling in the State quota, and were demanding Rs. 40 lakh to Rs. 50 lakh fees as against Rs. 5.5 lakh fixed by the statutory fee committee for self-financing colleges.
Admitting the plea, the First Bench headed by Chief Justice Indira Banerjee passed an interim order on June 16, directing the universities to admit candidates provisionally selected for admission to PG medical courses through common counselling by taking Rs. 10 lakh as fee for the time being.
Now, alleging that the universities had failed to obey the interim order of the court, the petitioner had moved the present petition seeking to initiate contempt proceedings against the management of the colleges concerned.
When the plea came up for hearing, Mr. Menon said: “In compliance with the interim order 27 students have deposited the prescribed provisional fee of Rs. 10 lakh with the Centac, well before the prescribed time limit and thereafter they had approached the respective colleges to attend the classes from June 20. However, the colleges did not admit students by stating that there were no vacancies available with them in the respective branches.”
Seats for low scores
Relying on the list of admitted students notified by Centac on May 31, the petitioner said: “The actual lists of students admitted by the respective colleges shall show that the colleges had admitted students with lower NEET scores as well as those who have not undergone common counselling in places of students who had been issued provisional admissions by Centac.
“Hence, the seats which were allotted to the students as per Centac list, based on merit and common counselling on various dates, have been illegally diverted by colleges to less meritorious students in gross violation of the statutory provisions.”
Alleging that the Convenor of Centac had acted in collusion with the colleges in denying rightful admission to the deserving poor and bright students, the petitioner wanted the court to punish them for wilful disobedience of court order and for causing mental agony and losses to the affected students.

NEWS TODAY 21.12.2024