Wednesday, January 16, 2019

வெளியூர்களில் இருந்து 10 ஆயிரம் சிறப்பு பஸ்கள்

Added : ஜன 15, 2019 23:44

சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் முடியும் நிலையில், நாளை முதல், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் நேற்று, பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்றும், நாளையும் மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கான அரசு விடுமுறை நாட்கள், நாளையுடன் முடிகிறது. அதனால், வெளியூர்களில் இருந்து, சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், தாங்கள் வசிக்கும் ஊர்களுக்கு திரும்ப, நாளை முதல் சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சென்னைக்கு செல்வதற்கு மட்டும், நாளை முதல், 20ம் தேதி வரை, 3,776 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், சென்னை அல்லாத மற்ற பகுதிகளுக்கு செல்ல, 7,841 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை தவிர, தனியார் ஆம்னி பஸ்களும் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.பயணியரின் வழிகாட்டுதலுக்காக, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை, சேலம், நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட முக்கிய பஸ் நிலையங்களில், போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினர் இணைந்து, உதவி மையங்கள் அமைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024