Monday, January 7, 2019

ரயிலில் ஊருக்கு செல்பவரா நீங்கள்? : 20 நிமிடத்துக்கு முன் வர வேண்டும்

Added : ஜன 06, 2019 21:42


புதுடில்லி : விமான நிலையங்களில் பின்பற்றப்படும் நடைமுறையை போல், ரயில்வே ஸ்டேஷன்களிலும், 15 - 20 நிமிடங்களுக்கு முன், பயணியர் வந்து, பாதுகாப்பு சோதனை நடைமுறைகளை முடிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன் பின் வருவோர், ரயிலில் ஏற அனுமதிக்கப்பட மாட்டர்கள்.விமான பயணம் செல்வோர், தங்கள் விமானம் புறப்படுவதற்கு, ஒரு மணி நேரம் முன் வந்து, பாதுகாப்பு சோதனைகளை முடித்து விட வேண்டும். தாமதமாக வருவோர், விமான பயணத்தை இழக்க வேண்டி இருக்கும். இதை போன்ற நடைமுறையை, ரயில் பயணத்துக்கும் ஏற்ஸபடுத்த, ரயில்வே பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர், அருண் குமார், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:நீண்ட துார ரயில் பயணம் செய்வோர், தங்கள் ரயில் புறப்படும் நேரத்துக்கு, 15 - 20 நிமிடங்கள் முன், ஸ்டேஷனுக்கு வந்து விட வேண்டும். தேவையான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின், ரயில்களில் அமர அனுமதிக்கப்படுவர். அதற்கு பின், வருவோர், அந்த ரயில்களில் ஏற முடியாத வகையில், சம்பந்தப்பட்ட, 'பிளாட்பார்ம்'களுக்கான, வழி மூடப்படும்.இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. உ.பி.,யில், பிரயாக்ராஜ் நகரில் நடக்கும் கும்பமேளாவுக்கு, ஏராளமானோர், ரயில்களில் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.பிரயாக்ராஜ் ரயில்வே ஸ்டேஷனில், புதிய பாதுகாப்பு நடைமுறை அமலில் உள்ளது. கர்நாடகாவில், ஹூப்ளி ரயில்வே ஸ்டேஷனிலும், இந்த திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், 202 ரயில்வே ஸ்டேஷன்களிலும், புதிய பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.ரயில் புறப்படும் நேரத்துக்கு, குறிப்பிட்ட நேரத்துக்கு முன், அதற்கான பிளாட்பாரத்துக்கு செல்லும் பாதைகளை மூடுவதற்கு, தக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.'இந்த திட்டம், புறநகர் ரயில் சேவைக்கு பொருந்தாது' என, ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

MMC students removed midway from CME programme on LGBTQIA+

MMC students removed midway  from CME programme on LGBTQIA+ C. Palanivel Rajan MADURAI 29.09.2024  At a time when inclusiveness of the LGBTQ...