Wednesday, January 2, 2019

அதிவேக, 'தேஜஸ்' ரயில் சேவை மதுரையில் துவக்குகிறார் மோடி

Added : ஜன 01, 2019 23:40

சென்னை - மதுரை இடையேயான, அதிவேக, 'தேஜஸ்' ரயில் போக்குவரத்தை, பிரதமர் நரேந்திர மோடி, வரும், 27ம்தேதி, மதுரையில் துவக்க, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.சென்னை எழும்பூர் - மதுரை இடையே, அதிநவீன தேஜஸ் ரயில் சேவை, கடந்த டிசம்பர், இரண்டாவது வாரத்தில் துவங்க உள்ளதாக, தகவல் வெளியானது; ஆனாலும், துவக்கப்படவில்லை.இந்நிலையில், லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக, கேரளா மாநிலம், திருச்சூருக்கு, பிரதமர் மோடி, வரும், 27ம் தேதி வருகிறார். அன்று, தமிழகத்தில், மதுரையில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் அவரை பங்கேற்க வைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.மேலும், மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் சென்னை - மதுரை இடையேயான, அதிவேக, தேஜஸ் ரயில் போக்குவரத்து துவக்க விழாவும், அன்றே நடத்தப்பட உள்ளது. இந்த விழாக்களில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.அப்போது, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, சென்னை தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., - வண்ணாரப்பேட்டை இடையேயான, மெட்ரோ ரயில் போக்குவரத்தையும் துவக்கி வைக்கிறார்.இதற்காக, தெற்கு ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்கும்படி உஷார் படுத்தப்பட்டுள்ளன. முறையான அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, தெரிகிறது.
- நமது நிருபர் -



No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024