Wednesday, January 2, 2019

பி.எஸ்.என்.எல்., சர்வர் பழுது : புதிய, 'சிம்' பதிவில் சிக்கல்

Added : ஜன 01, 2019 23:09

மென்பொருள் பழுது காரணமாக, புதிய, 'சிம்' கார்டுகளை பதிவு செய்ய முடியாமல், 10 நாட்களுக்கும் மேலாக, பி.எஸ்.என்.எல்., திணறி வருகிறது.பி.எஸ்.என்.எல்.,லில், புதிய சிம் கார்டுகளை பதிவு செய்ய, 'சாஞ்சார்' என்ற, மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மென்பொருள் சர்வர் செயல்படாததால், புதிய இணைப்புகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:புதிய, 'சிம்' கார்டு மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து, பி.எஸ்.என்.எல்.,லுக்கு மாறுவோரின் தகவல்கள், 'சாஞ்சார்' என்ற, மென்பொருள் வாயிலாக, பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு தகவல்களை பதிவு செய்த பிறகே, புதிய சிம் கார்டு செயல்பட துவங்கும்.தற்போது, 10 நாட்களுக்கு மேலாக, மென்பொருள் சர்வர் செயல்படாடின்றி முடங்கியுள்ளது. இதனால், புதிய வாடிக்கையாளர்களுக்கு, சிம் கார்டு வழங்க முடியவில்லை. பிற நிறுவனங்களில் இருந்து மாறுவோரும், 'பி.எஸ்.என்.எல்., சேவையிலும் குறைபாடா...' என, விரக்தி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினார்.
- நமது நிருபர் -


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024