பழநி தைப்பூசம் இரண்டாம் நாள்
Added : ஜன 15, 2019 22:01
சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி, மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால் வைத்தாலே பாதி நோய் தீரும். பழநி மலை ஏறி முருகனை தரிசித்தால் முழு நோயும் நீங்கும். 'அதிசயம் அநேகமுற்ற பழநி' என்று அருணகிரிநாதர் இதன் சிறப்பை போற்றுகிறார். ஒரு கோவிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை மூர்த்தம் (சிலை), தீர்த்தம், தலம் (அமைவிடம்) ஆகிய மூன்றாகும். பழநியில் சக்தி மிக்கதாக இருப்பது மூர்த்தம் என்னும் மூலவர் சிலை. பார்ப்பதற்கு சிலை வடிவில் தோன்றினாலும் நவ பாஷாணம் என்னும் ஒன்பது மருந்துகளால் ஆனதாகும். போகர் என்னும் சித்தர் இச்சிலையை உருவாக்கினார். சிவனின் அம்சமாகத் திகழும் இவருக்கு தினமும் பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருநீறால் அபிஷேகம் நடக்கிறது. ஆண்டிக் கோலத்தில் காட்சி தரும் இவர் நம் உடல் நோயைப் தீர்ப்பதோடு பிறவிப்பணியையும் போக்குகிறார். இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் முத்துகுமாரசுவாமி சப்பரத்தில் பவனி........
No comments:
Post a Comment