Saturday, January 19, 2019


ஓய்வூதியர்கள் இணையதளம் துணை முதல்வர் துவக்கி வைப்பு

Added : ஜன 18, 2019 23:13

சென்னை, தமிழக அரசின் கருவூல கணக்கு ஆணையரகம் மற்றும் தேசிய தகவல் மையம் இணைந்து உருவாக்கியுள்ள, ஓய்வூதியர்கள் இணைய தளத்தை, துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று தலைமைச் செயலகத்தில், துவக்கி வைத்தார்.ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், தாங்கள் ஓய்வூதியம் பெற்ற விபரங்கள்; உயர்த்தி வழங்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம்; ஓய்வூதிய நிலுவைகள்; மாதாந்திர ஓய்வூதியம்; ஓய்வூதிய பணப்பயன்கள், வங்கியில் வரவு வைக்கப்பட்டது போன்ற விபரங்களை, கம்ப்யூட்டர் வழியே அறிந்து கொள்வதற்காக, இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் வழியே, ஓய்வூதியர் வாழ்நாள் சான்று அளித்த விபரம்; 80 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு பெறப்படும், கூடுதல் ஓய்வூதியம்; ஓய்வூதியர் வாரிசுதாரர் நியமனம்; பண்டிகை முன்பணம் போன்ற விபரங்களையும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இது தவிர, அரசாணைகள், சுற்றறிக்கைள், ஓய்வூதியர்களுக்கு தேவையான முக்கியப் படிவங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் முகவரி, https://tnpensioner.tn.gov.in . இதன் வழியே, தமிழக அரசின், 7.30 லட்சம் ஓய்வூதியர்கள் பயன்பெறுவர்.இணையதளம் துவக்க நிகழ்ச்சியில், நிதித்துறை கூடுதல் செயலர், சண்முகம், கருவூல கணக்குத் துறை முதன்மைச்செயலர், ஜவகர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 29.09.2024