Thursday, November 7, 2019

டாக்டர்கள் இடமாற்றத்தை ரத்து செய்ய முடியாது

Added : நவ 06, 2019 23:39

சென்னை: 'போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களின் பணியிட மாற்ற ஆணையை, ரத்து செய்ய முடியாது' என, அரசு தெரிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர், ஏழு நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில், 70 பேரை, பணியிட மாற்றம் செய்து, சுகாதாரத்துறை உத்தரவிட்டது.இந்த உத்தரவை பரிசீலிக்க வேண்டும் என, அனைத்து டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர், சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

ஆனால், டாக்டர்களின் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.இது குறித்து, சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், 'டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில், சுகாதாரத்துறை பின்வாங்காது. 'பணியில் இருந்து வெளியேற்றுவது மட்டுமே, ரத்து செய்யப்பட்டுள்ளது; பணியிட மாற்ற ஆணை ரத்து செய்யப்படாது' என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024